சென்னை: தமிழக அரசின் 2023-24ம் நிதியாண்டுக்கான படஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மின்னணு வடிவில் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்.

புதுமைப்பெண் திட்டத்தில் மாதம் ரூ.1000 வழங்குவதால் உயர்கல்வியில் முதலாமாண்டு சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 29% அதிகரித்துள்ளது.

புதுமைப்பெண் திட்டத்தில் மாதம் ரூ.1000 வழங்குவதால் உயர்கல்வியில் முதலாமாண்டு சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 29% அதிகரிப்பு.

புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 2 லட்சத்து 20 ஆயிரம் மாணவிகள் பயனடைந்துள்ளனர்

பொதுவிநியோகத்திட்டத்தில் உணவு மானியத்திற்காக ரூ.10,500 கோடி ஒதுக்கீடு 

மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்க ரூ. 320 கோடி ஒதுக்கீடு

கடல் அரிப்பை தடுக்க, கடல் மாசுபாட்டை குறைக்க ₹2000 கோடி மதிப்பீட்டில் ‘தமிழ்நாடு நெய்தல் மீட்சித்திட்டம்’ உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்படும்.

பொதுவிநியோகத்திட்டத்தில் உணவு மானியத்திற்காக ₹10,500 கோடி ஒதுக்கீடு

5145 கி.மீ கிராமப்புற சாலைகள் ₹2000 கோடி மதிப்பீட்டில், முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படும் – நிதியமைச்சர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சிப்காட் வளாகத்தில் ₹80 கோடி மதிப்பில் அதிநவீன திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்படும்

ஆதிதிராவிடர், பழங்குடியின பிரிவு மாணவர்களுக்கு 4 புதிய விடுதிகள் நவீன வசதிகளுடன் கட்டப்படும்; இதன் பராமரிப்பு பணிகள் நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனங்களிடம் அமைக்கப்படும்

 தமிழக போக்குவரத்து துறைக்கு 8 ஆயிரத்து 56 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக போக்குவரத்து துறைக்கு புதிதாக 1000 பேருந்துகள் வாங்க, தமிழக பட்ஜெட்டில் 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

வடபழனி, திருவான்மியூர், வியாசர்பாடியில் உள்ள பேருந்து பணிமனைகள் ரூ.1600 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் எனவும் கூறினார்.