ஆஸ்திரேலியாவில் பிறந்த அமெரிக்க செய்தி மற்றும் ஊடகத் துறை தொழிலதிபர் ரூபர்ட் முர்டோக் தனது ஃபாக்ஸ் & நியூஸ் கார்ப் ஆகிய நிறுவனங்களின் தலைவர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.

92 வயதான ரூபர்ட் முர்டோக் இதுகுறித்து தனது நிறுவன ஊழியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு நவம்பர் மாதம் ஃபாக்ஸ் மற்றும் நியூஸ் கார்ப் ஆகிய இரண்டு நிறுவனங்களில் இருந்தும் தனது அனைத்து பொறுப்புகளில் இருந்து விலக உள்ளதாக கூறியுள்ளார்.

தனக்கு அடுத்து தனது மகன் லாக்லன் இந்த இரு நிறுவனங்களின் தலைமை பொறுப்பை ஏற்க உள்ளதாகவும் ஓய்வுபெற்ற தலைவராக தான் இந்த நிறுவனத்துக்கு ஆலோசனைகள் வழங்கவுள்ளதாகவும் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.