இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி: தேர்தலுக்கு முன் எண்ணெய் விலை உயரும்

மும்பை:

ஆசியாவில் முதன்மையில் இருந்த இந்திய ரூபாயின் மதிப்பு, கடந்த 2 வாரங்களில் மோசமான நிலைக்கு சென்று சென்றுவிட்டது. இதனால், எண்ணெய் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


மே மாதத்தில் நடைபெறும் பொதுத் தேர்தலுக்கு முன்னர், எண்ணெய் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் , நாட்டின் இறக்குமதி, மற்றும் விவசாய விளைபொருட்கள் குறித்த கவலை அதிகரித்து வருகிறது.

இந்தியாவைப் பொருத்தவரை, 80 சதவீத எரிசக்தி தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது. எனவே எண்ணெய் விலை உயரும் பட்சத்தில் நிதிக் கணக்கை ஈடு செய்வது இயலாத ஒன்றாகிவிடும்.
மத்திய வங்கியின் கூற்றுப்படி, எண்ணெய் விலை 10 டாலர் உயர்ந்தால், 12.5 பில்லியன் டாலர் என்ற அளவுக்கு நிதி இடைவெளி உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய தேர்தல் தோல்விக்குப் பிறகு, மீண்டும் மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும் வகையில் பாஜக சலுகைகளை அறிவித்தால், மேலும் நிதிப் பற்றாக்குறை ஏற்படலாம்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: எண்ணெய் விலை உயர்வு, நிதிப் பற்றாக்குறை
-=-