நெட்டில் கபாலி? : இப்போதைக்கு வதந்தியாம்!

Must read

“கபாலி” படத்தை இணையத்தில் யாரும் வெளியிட்டுவிடக்கூடாது என்று நீதிமன்றத்தில் முன்னெச்சரிக்கையாக வழக்குத் தொடர்ந்து 225 திருட்டு வீடியோ இணையத் தளங்களை முடக்கும் உத்தரவைப் பெற்றார் அப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு.
அவரது இந்த நடவடிக்கையால் ஆத்திரப்பட்ட திருட்டு வீடியோ தளங்கள், ‘கபாலியை வேறு சர்வர் மூலம் வெளியிட்டே தீருவோம்’ என்று வெளிப்படையாக,  ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத் தளங்களில் அறிவித்தன.
இந்த நிலையில், கபாலி படத்தின் திருட்டு வீடியோ டார்க் வெப் எனப்படும் சட்டவிரோத இணையதளங்களில்  வெளியானதாக செய்திகள் கசிந்துள்ளன.
 
1456202239_Cb052QGUYAEDPpS
“டார்க் வெப்” என்பது போதை பொருள் விற்பனை, கூலிப்படை, தீவிரவாதம், ஆயுத கடத்தல் போன்ற சட்டவிரோத செயல்களுக்கு உதவும் இணையதளங்கள்.
இவற்றை  சாதாரணமாக நமது கம்ப்யூட்டர்களில், மொபைல்களில் பார்க்க முடியாது.  இதற்கென்று சில அட்வான்ஸ்டு டெக்னாலஜி வேண்டும்.
இப்படிப்பட்ட டார்க் வெப் இணையதளங்கள் சிலவற்றில்தான் கபாலி வெளியானதாக இன்று ஒரு தகவல் கிளம்பியது. ஆனால் தற்போது அது வதந்தி என்று தெரியவந்திருக்கிறது.
அதே நேரம், திருட்டு வீடியோ தளங்கள் சில, “இப்போதைக்கு இது வதந்தி. ஆனால் விரைவில் காபாலியை வெளியிடுவோம்” என்று  அறிவிப்புகளை சமூகவலைதளங்களில் வெளியிட்டுக்கொண்டே இருக்கின்றன.
அதே நேரம் கோலிவுட் வட்டாரத்தில் வேறு மாதிரி முணுமுணுக்கிறார்கள்:
“விஜய் நடித்த கத்தி திரைப்படம், இஸ்லாமியருக்கு எதிராக இருப்பதாக அம்மத அமைப்புகள் சில எதிர்ப்பு தெரிவித்தன. அந்த சூழ்நிலையில் கத்தி படம் வெளியானபோதே, திருட்டு வீடியோ இணையதளங்களிலும் அப் படம் வெளியானது. அந்த திருட்டு வீடியோ லிங்க்கும் பரவலாக பகிரப்பட்டது.
ஆனாலும் கத்தி திரைப்படத்தை பெருவாரியான மக்கள் திரையரங்குக்கு வந்து பார்த்தனர். படம் வெற்றி பெற்றது.
படம் நன்றாக இருந்தால் வெற்றி பெறும்.  ஆகவே இது போன்ற வதந்திகளை பொருட்டாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.
கோர்ட்டுக்கு போவதாலோ, இணையத்தில் படம் வெளியாகிவிட்டது போன்ற வதந்திகளாலோ படத்தை ஓடவைக்க முடியாது” என்கிறார்கள்.

More articles

Latest article