ரம்

‘ரம்’ என்ற பண்டையக்கால சொல்லுக்கு ‘தீர்ப்பு’ என்ற அர்த்தமும் இருக்கின்றது….ஒவ்வொரு மனிதனும், ஒவ்வொரு ஆத்மாவும் செய்யக்கூடிய எல்லா தீய செயல்களுக்கும் என்றாவது ஒரு நாள் ‘ரம்’ எனப்படும் கருணையற்ற தீர்ப்பு வழங்கப்படும்…. அத்தகைய தீர்ப்பு எவ்வாறாக இருக்கும் என்பதை உணர்த்த இருக்கிறது, அறிமுக இயக்குனர் சாய் பரத் இயக்கத்தில், ‘ஆல் இன் பிச்சர்ஸ்’ விஜயராகவேந்திரா தயாரித்து இருக்கும் ‘ரம்’ திரைப்படம். இந்த ‘ரம்’ திரைப்படத்திற்காக அனிரூத் இசையமைத்த ‘ஹோலா அமிகோ’ மற்றும் ‘பேயோபோபிலியா’ பாடல்கள் கிராமிய விருது பெற்ற டி ஜே டிப்ளோ உட்பட பலதரப்பட்ட உலக இசை கலைஞர்களின் பாராட்டுகளை பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

‘வி ஐ பி’ புகழ் ஹ்ரிஷிகேஷ், ‘சூது கவ்வும்’ புகழ் சஞ்சிதா ஷெட்டி, மியா ஜார்ஜ், நரேன் மற்றும் விவேக் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘ரம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற நவம்பர் 2 ஆம் தேதி பிரம்மாண்டமான முறையில் நடைபெற இருக்கின்றது.⁠⁠⁠⁠