உயர்ஜாதியை பல்லக்கில் ஏற்றி பவனி வரும் ஆர் எஸ் எஸ்
ஆர். எஸ். எஸ். குரு பீடத்தின் உயிர்த்துடிப்பு என்பதே, உயர்சாதியைப் பல்லக்கில் ஏற்றிப் பவனி வருவதைக் கண்டு மகிழ்வது தான்!
கடந்த ஏழு வருடங்களாக, சீடப் பிள்ளை மோடி தனது ‘குருபீடத்’தின் சித்தாந்தத்தைத் தீவிரமாக நடைமுறைப் படுத்தி வருகிறார்!
இதனால் தான் ‘ உயர்சாதி’ ஏழைகளுக்கு 10 சதவீதம் அளிக்கும் சட்டத்தை 24 மணி நேரத்தில் , மின்னல் வேகத்தில் நிறைவேற்றினார்!
ஆனால், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்ததுவதில் ஆர்வம் காட்ட மறுக்கிறார்!
இதற்கு உச்ச நீதி மன்றம் மோடி அரசிடம், ” உயர் சாதியினருக்கு இட ஒதுக்கீடு தருவதில் ஏன் இந்த அவசரம்? “என்று கேட்டுக் கண்டனம் தெரிவித்துள்ளது!
அடுத்ததாக, நேற்றைய தினம் மோடி அரசு தனது சி. பி. எஸ். சி.. பாடத் திட்டத்தையே இரண்டாகப் பிரித்து, ‘இந்தி மொழிக்குப் பெரிய பாடங்கள்..மற்ற மாநிலங்களுக்கு சிறிய பாடங்கள் என்று உத்தரவிட்டுள்ளது!
இதன் மூலம், இந்தி பேசும் மக்களுக்கு ஆலவட்டமும், மற்ற மொழிகளைப் பேசுவோர் க்குப் பாரபட்சமும் இழைத்துள்ளது!
‘இந்தி பேசும் மாநிலங்களில் தம் வாக்கு வங்கியைப் பலப்படுத்திக் கொள்வோம்… மற்ற மாநிலங்களில் ‘வேறு உத்திகளைக்’ கையாள்வோம் என்று திட்டமிடுகிறது ஆர். எஸ். எஸ். மூளை!
மக்கள் இவற்றையெல்லாம்
அமைதியாகப் கொண்டிருக்கிறார்கள்! !
—- ஓவியர் இரா. பாரி.