சென்னை
திமுக அமைப்பு செயலர் ஆர் எஸ் பாரதி அண்ணாமலையில் அறிவாலயத்தின் ஒரு புல்லைக் கூட பிடுங்க முடியாது எனக் கூறியுள்ளார்.
இன்று சென்னையில் திமுக அமைப்பு செயலர் ஆர் எஸ் பாரதி செய்தியாளர்களிடம்.
”சென்னையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் அண்ணமலை அண்ணா அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கல்லையும் உருவி எடுத்துவிட்டுத்தான் போவேன் என கூறியுள்ளார். ஆனால் அறிவாலயத்தில் இருக்கும் ஒரு புல்லைக் கூட அண்ணாமலையால் பிடுங்க முடியாது. அது நடக்கவே நடக்காது.
என்னிடம் அதிமுகவை பற்றி கேட்க வேண்டாம், ஏனென்றால் அவர்களே பாவம். நெருக்கடியில் இருக்கிறார்கள். அதிமுகவில் இருக்கும் யாரை பற்றியும் நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை.
நடிகர் விஜய்க்கு 15 முதல் 20 சதவீத வாக்கு வங்கி இருப்பதாக பிரசாந்த் கிஷோர் அறிக்கை கொடுத்துள்ளது குறித்த கேள்விக்கு பதிலளிக்க விரும்பவில்லை. பிரசாந்த் கிஷோரே பீகாரில் டெபாசிட் வாங்கவில்லை”
என்ரூ கூறியுள்ளார்.
RS Bharathi, Arivalayam, Annamalai, ஆர் எஸ் பாரதி, அறிவாலயம், அண்ணாமலை