டில்லி:

குஜராத்தை சேர்ந்த தொழில் அதிபர் ஹிதேஷ் படேல் தலைமறைவாக வாழ்ந்து வந்த நிலை யில்  அல்பேனியாவில் கைது செய்யப்பட்டார்.  ஏற்கனவே குஜராத் வைர வியாபாரி நிரவ் மோடி லண்டனில் கைது செய்யப்ப்டட நிலையில் தற்போது மேலும் ஒரு குஜராத் தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குஜராத் மாநிலத்தில் இயங்கி வந்த  ‘ஸ்டெர்லிங் பயோடெக்’ நிறுவனம், தொழில் வளர்ச்சிக்காக மாநிலத்தில் உள்ள  பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கியுருந்தது. சுமார்  ரூ.8,100 கோடி கடன் உள்ள நிலையில், பினாமி பெயரில் 300க்கும் மேற்பட்ட நிறுவனங்கள்  தொடங்கி முறைகேட்டில் ஈடுபட்டது அம்பலமானது.

இதையடுத்து,  ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனத்தின் உரிமையாளர்களான சந்தேசரா (நிதின், சேத்தன்) சகோதரர்கள், மற்றும் அவர்களின் மைத்துனர் ஹிதேஷ் படேல் மீது, சிபிஐ, அமலாக்கத்துறையினர்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் அவர்கள்  அனைவரும் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். அவர்களை கைது செய்ய  இன்டர்போல் உதவி நாடப்பட்டது.

இந்த நிலையில், நிதின் சந்தேசரா,  நைஜீரியாவில் இருப்பதாக கூறப்பட்டது. அவரை கைது செய்து இந்திய அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடை யில்,   சந்தேசரா சகோதரர்களின் மைத்துனரும், இந்த கடன் மோசடியில் முக்கிய குற்றவாளி யுமான ஹிதேஷ் படேல், தென்கிழக்கு ஐரோப்பிய நாடான அல்பேனியாவில் தலைமறைவாக இருந்தது தெரிய வந்துள்ளது. அவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

அவர்களை  இந்தியாவுக்கு நாடு கடத்தி கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.