சென்னை: அதிமுக ஆட்சியில் கூட்டுறவுதுறையில் ரூ.750 கோடி மோசடி நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சியின்போது, கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்தவர் செல்லூர் ராஜு. அவரது தலைமையின் கீழ் கூட்டுறவுத்துறையில்  பல மோசடிகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. இந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், கூட்டுறவுத்துறையின் ஊழல்கள் கண்டு பிடித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பெரியாசமி கூறியிருந்தார்.

இந்த நிலையில், இன்று திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஐ. பெரியசாமி, கடந்த அதிமுக ஆட்சியில் ரூ.750 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது  கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது என தெரிவித்தார்.

மேலும், கூட்டுறவுத்துறையில் மோசடி செய்தவர்களை விசாரணைக்குழு கண்டறிந்தபின், அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம்  விடப்படும் என்றும், அதன் மூலம் கிடைக்கக் கூடிய தொகை கஜானாவில் சேர்க்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.