சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்ககாக ரூ.685 கோடி செலவு செய்யப்பட்டு இருப்பதாக  தமிழக அரசு  தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக பொதுமக்களிடம் பெறப்பட்ட நன்கொடையை காட்டிலும் அதிக தொகையை தமிழக அரசு செலவழித்திருப்பது ஆவணங்கள் மூலமாக தெரிய வந்திருக்கிறது.

கொரானா தொற்றிலிருந்து மீள முதலமைச்சரின் பொது நிவாரணநிதியின் கீழ் பெறப்படும் நன்கொடைகள் கொரனா தொற்றுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் எனவும் செலவு விவரங்கள் பொதுவெளியில் வெளியிடப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார். அதன்படி செலவினத் தொகைகள் வெளியிடப்பட்டு உள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் நிதியுதவி வழங்கப்பட்டது தொடர்பாக செலவு கணக்கை பொது வெளியில் தமிழக அரசு வெளியிட்டது. அதில், கடந்த ஓராண்டில் அதாவது மே 2021 முதல் ஜூன் 2022 வரையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்க ரூ.685 கோடி செலவிடப்பட்டதாக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

மே 2021 முதல் ஜூன் 2022 வரையில் கொரனா தடுப்பு மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதி உதவியாக மொத்தம் ரூ.685 கோடி செலவிடப்பட்டிருக்கிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

  1. முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பெறப்பட்ட நன்கொடை – ரூ.553 கோடி
  2. RT PCR KIT, ரெம்டெசிவர், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், மருத்துவ உபகரணங்கள் வாங்கிய செலவு – ரூ.285 கோடி
  1. தொற்றால் உயிரிழந்த நீதிபதிகள், காவலர்கள், முன்களப்பணியாளர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட நிதியுதவி – ரூ.95 கோடி
  1. தொற்றால் தன் இரண்டு பெற்றோர்களையும் இழந்த 322 குழந்தைகளுக்கு தலா ரூ.5லட்சம் என வழங்கப்பட்ட நிதியுதவி – ரூ.16 கோடி
  1. தொற்றால் ஒரு பெற்றோரை இழந்த 9565 குழந்தைகளுக்கு தலா ரூ.3 லட்சம் என வழங்கப்பட்ட நிதியுதவி – ரூ.287 கோடி
  1. கொரானா தொற்றால் ஒரு பெற்றோரை இழந்த 9 இலங்கை தமிழ் குழந்தைகளுக்கு தலா 3 லட்சம் என வழங்கப்பட்ட நிதியுதவி – ரூ.27 லட்சம்

மேலும், தடுப்பு உபகரணங்களான RT PCR KIT, ரெம்டெசிவர், ஆக்ஸிஜன் சிலிண்டர் ஆகியவைகள் ரூ.303 கோடிக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் உயிரிழந்த 2 நீதிபதிகள், 94 காவலர்கள், 34 மருத்துவர்கள், 249 முன்களப்பணியாளர்கள், 10 செய்தியாளர்கள் என 400 பேரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.