சென்னை: தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளின் வளர்ச்சிக்காக ரூ.609 கோடி நிதி ஒதுக்கீடுசெய்து தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 2010ம் ஆண்டுடிசம்பர் இறுதியில் நடைபெற்று 2020 ஜனவரியில் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றனர். அதைத் தொடர்ந்து, கொரோனா தொற்று காரணமாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால், விடுபட்ட ஊராட்சி அமைப்புகளும், நகராட்சி, மாநகராட்சிகளுக்கும் தேர்தல் நடத்தப்படாமல் இருந்து வந்தது. பின்னர் பொதுமுடக்கம் தளர்வுக்கு பின், சமீபத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து நகர்ப்பு உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில்,  கிராம ஊராட்சி,ஊராட்சி ஒன்றியம் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான வளர்ச்சி நிதி ரூ.609 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின்கீழ் 2021-22 ஆம் ஆண்டிற்கான 5-வது மாநில நிதி ஆணையத்தின் மானியங் களின்படி கிராம பஞ்சாயத்துகள், பஞ்சாயத்து யூனியன்கள் மற்றும் மக்கள் தொகை மானியம் ஆகிய மூன்று உள்ளாட்சி அமைப்புகளுக்கு நவம்பர், டிசம்பர் மாதங்களுக்கான வளர்ச்சி நிதியாக ரூ.609,43,59,714 நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.