ரூ570 கோடி கன்டெய்னர் குறித்து  சிபிஐ விசாரணை: இளங்கோவன் மீண்டும் வலியுறுத்தல்

Must read

சென்னை: திருப்பூர் அருகே 3 கண்டெய்னர்களில் பிடிபட்ட ரூ570 கோடி விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
\சட்டசபை தேர்தலின் போது திருப்பூர் அருகே 3 கண்டெய்னர்களில் ரூ570 கோடி, தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் ஆய்வில் சிக்கியது. இது வங்கிகளுக்கு சொந்தமான பணம் என கூறி ஒப்படைக்கப்பட்டது.  ஆனாலும் இந்த பெரும் தொகை குறித்து சந்தேகம் நீடித்து வருகிறது.
1
இந்த பணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியதாவது:
“திருப்பூர் அருகே ரூபாய் 570 கோடி கண்டெய்னர் லாரியில் பிடிபட்டது. இது குறித்த மர்மம் தொடர்கிறது. எனவே இது தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும்.
திமுக தலைவர் கருணாநிதி இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். இதையே நானும் கேட்கிறேன். இப்படி கேட்பது தவறு என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் எந்த அடிப்படையில் சொல்லியிருக்கிறார் என்பது எனக்கு தெரியவில்லை.
ரூ570 கோடியை முறையாகத்தான் சட்டப்படித்தான் கொண்டு சென்றோம் என்பதை ஆதாரத்தோடு நிரூபிக்க வேண்டிய கடமை ஜெயலலிதாவை விட தமிழிசை சவுந்தரராஜனுக்குத்தான் அதிகம் இருக்கிறது” – இவ்வாறு இளங்கோவன் தெரிவித்தார்.

More articles

Latest article