பிரதமர் நரேந்திர மோடியின் ரூபாய் நோட்டு தடை அறிவிப்புக்குப் பின் ஏற்ப்பட்ட பணத்தட்டுப்பாட்டை சமாளிக்க முழு வீச்சில் நடைபெற்று வந்த ரூ.500 நோட்டு அச்சடிப்புப் பணி நாசிக் மற்றும் தேவாஸ் கரன்சி அச்சகங்களில் திடீரென்று நிறுத்தப்பட்டுள்ளது

new500note

புதிதாக அச்சிடப்பட்ட நோட்டுகளில் கவனிக்கத்தக்க தவறுகள் இருந்தபடியாலும், அவசரகதியில் ஏராளமான நோட்டுக்களை அச்சிடும் அளவுக்கு பிரிண்ட்டர்கள் போதுமான திறனற்று இருப்பதாலும் இந்திய பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணயங்கள் உற்பத்திக் கழகம் (SPMCIL) ரூ.500 நோட்டுக்கள் அச்சிடுவதை நிறுத்தி வைக்கும்படி ரிசர்வ் வங்கியை கேட்டுக்கொண்டுள்ளது. இந்த பணி மைசூர் கரன்சி அச்சகத்துக்கு மாற்றப்படலாம் என நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.