சென்னை:

மிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக கூடுதலாக ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து உள்ளார்.

தமிழக சட்டமன்ற மானிய கோரிக்கை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று கூட்டம் தொடங்கியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைத்து உறுப்பினர்கள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சட்டமன்ற கூட்டத்தொடரை ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

அதைத் தொடர்ந்து நடைபெற்ற விவாதங்களைத் தொடர்ந்து, பதில் தெரிவித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் கொரோனா தொற்றை தடுக்கும் முயற்சியில் தமிழகஅரசு முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருவதாகவும், கொரோனா தொற்று அறிகுறியை அரசுக்கு தெரியப்படுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை  எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யும் இடங்களில் கூட்டம் கூடாமல் இருப்பதை போலீசார் கண்காணிக்க வேண்டும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என்றும்  முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

நாளை அனைத்து மானியக் கோரிக்கை மீதான விவாதம்  நடைபெற்று நிறைவேற்றப்படும் என்றும் கூறினார்.

மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தமிழகஅரசு ரூ.500 கோடி கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து உள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழகஅரசு ஏற்கனவே ரூ.60 கோடி நிதி ஒதுக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.