திருத்தணி
ரூ 45 கோடி செலவில் சிறுவாபுரி செல்லும் பக்தர்கள் வசதிக்காக மாற்றுப்பதை தயாராகி வருவதாக அமைச்சர் எ வ வேலு கூறியுள்ளார்.
இன்று பக்தர்களின் வசதிக்காக திருத்தணி ரெயில் நிலையத்திலிருந்து திருத்தணி முருகன் கோவிலுக்கு செல்லும் இலவச பஸ் சேவையை அமைச்சர்கள் சேகர்பாபு, எ.வ. வேலு, நாசர் ஆகியோர் தொடக்கிவைத்தனர்
பிறகு, சிறுவாபுரி கோவிலுக்கு செல்வதற்காக புதிய வழித்தடம் அமைப்பதற்கான இடத்தை பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.
அப்போது அமைசர் எ வ வேலு செய்தியாளர்களிடம்.
“சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு மாற்றுப்பாதையாக 4 வழிச்சாலையை ரூ.45 கோடி மதிப்பீட்டில் அமைக்க திட்டமிட்டுள்ளோம். இ
ந்த 4 வழிச்சாலைக்கான பணிகளை 6 மாதங்களில் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
4.6 கி.மீ. நீளத்திற்கு அமையவுள்ள இந்த சாலைக்காக 12 ஹெக்டர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளன. இந்த புதிய சாலையால் சிறுவாபுரி முருகனை தரிசிப்பதற்கான வழி எளிதாகும்”
என்று தெரிவித்துள்ளார்.