சென்னை:
மிழகத்தில் இதுவரை ரூ.412 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யபட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்றுடன் பிரச்சாரம் ஓய்கிறது. எனவே இன்றைய தினம் பிரச்சாரத்திற்கு கூடுதலாக 2 மணி நேரம் வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

இந்நிலையில், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக கொடுப்பதற்காக கொண்டு செல்லப்பட்ட ரொக்கப்பணம், தங்கம் உள்ளிட்ட பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.

இதுகுறித்து பேசிய தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, தமிழகத்தில் இதுவரை ரூ.412 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், ராணிப்பேட்டை தொகுதியில் இன்று காலை ஒரு வீட்டில் இருந்து ரூ.91.56 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து குறித்து 28 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும் சத்யபிரதா சாகு கூறினார்.