சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம் தொடர்பான போலீஸ் விசாரணைக்கு  மே 2-ம் தேதி நேரில் ஆஜராக உள்ளதாக,  பாஜக நெல்லை தொகுதி வேட்பாளர் நயினார் நாகேந்திரன்  தெரிவித்து உள்ளார்.  தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 கோடி பணம் என்னுடையது அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலையொட்டி, பறக்கும்படை நடத்திய சோதனையின்போது, சென்னையில் இருந்து நெல்லைக்கு எடுத்துச்சென்ற ரூ.4 கோடி பணம்,  தாம்பரம் ரயில் நிலையத்தில் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக அந்த பணத்தைச் எடுத்துச்சென்ற,  நயினார் நாகேந்திரனின் ஹோட்டல் ஊழியர்கள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டனர். அவர்கள்மீது தாம்பரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து, நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.

விசாரணையில், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள உணவு விடுதியில் இருந்து அதிகபணம் கைமாறியது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த உணவு விடுதி இருக்கும் கட்டிடம் பாஜக தொழில் துறைப் பிரிவு தலைவரான கோவர்த்தனனுக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. அங்கும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டு, ரூ.1.10 லட்சம் ரொக்கத்தைக் கைப்பற்றினர்.

இந்த நிலையில், இன்று  சென்னையில் பேட்டியளித்த நயினார் நாகேந்திரன்,  ரயில் நிலையத்தில்  ரூ.4 கோடி பணத்துக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்ததுடன், மே 2-ம் தேதி போலீஸ் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க  இருப்பதகா தெரிவித்துள்ளார்.

முன்னதாக காவல்துறை தரப்பில் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பிய நிலையில்,  தேர்தல் பணிகள் காரணமாக 10 நாட்கள் அவகாசம் கோரியிருந்தார்.  இதனை அடுத்து 2-வது முறையாக இன்று அவருக்கு சம்மன் அனுப்பபட்டுள்ளது. இதையடுத்து,  செய்தியாளர்களுக்கு இன்று செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன்,  மே 2-ம் தேதி போலீஸ் விசாரணைக்கு ஆஜராவுள்ளதாக தெரிவித்தார். மேலும், அரசின் இந்த செயலை,  அரசியல் சூழ்ச்சியாகவே இதை பார்க்கிறேன். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். ரூ.4 கோடியை மட்டும் குறிவைத்து பேசுபொருளாக்கி வருகின்றனர். பிடிபட்ட பணத்திற் கும், எனக்கும் தொடர்பில்லை. பலமுறை கூறிவிட்டேன். போலீசார் கடமையை செய்கின்றனர். என் தரப்பில் முழு ஒத்துழைப்பு தருவேன் என்று தெரிவித்துள்ளார்.