சென்னை: பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரியில் ரூ.3 குறைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக  பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவித்தார். அதையடுத்து, இந்த விலை குறைப்பு நாளைமுதல் அமலுக்கு வருவதாக தமிழக முதல்வர் அறிவித்து உள்ளார்.

திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி, தமிழக பட்ஜெட்டில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 3 குறைக்க முதல்வர் உத்தரவிட்டு இருப்பதாக தெரிவித்தார். இந்த  வரி குறைப்பால் ஆண்டுக்கு ரூ.1,160 கோடி வருவாய் இழப்பு ஏற்படும். பெட்ரோல் வரி குறைப்பு உழைக்கும் நடுத்தர குடும்பங்களுக்கு நிவாரணமாக அமையும் என தெரிவித்தார்.

இந்த நிலையில், இந்த விலை குறைப்பு நாளைமுதல் அமலுக்கு வரும் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது. இதுகுறித்த அறிவிப்பை  தமிழக நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.

திமுக தனது அறிக்கையில் பெட்ரோல் விலையில் ரூ.5  குறைப்பதாக உறுதியளித்த நிலையில் பட்ஜெட்டில் ரூ.3 குறைப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.