சென்னை: கிழக்கு கடற்கரை சாலையை விரிவுபடுத்த ரூ. 24,000 கோடியில் திட்ட மதிப்பீடு தயாராக இருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.
பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு நடைபெற்று வருகிறது. இந்த அமர்வில் ராகுல்காந்தியின் கேம்பிரிட்ஜ் பேச்சு, அதானி விவகாரம் தொடர்பாக குழப்பம் ஏற்பட்டுள்ளதால், கடந்த 4 நாட்களாக அவை முடக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், உறுப்பினர்களின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் தெரிவித்துள்ள மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரி, கிழக்கு கடற்கரை சாலையை மாமல்லபுரத்தில் இருந்து கன்னியாகுமரி வரை விரிவுபடுத்துவதற்கு ரூ. 24,000 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு உள்ளது என்றும், அதன்படி, மாமல்லபுரத்தில் இருந்து கன்னியாகுமரி வரை பாலங்கள், சுரங்கங்களுடன் பிரிக்கப்பட்ட நான்கு வழிச் சாலையாக அமைக்கப்படவுள்ளது.
இந்த திட்டம் 8 பிரிவாக இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.