சென்னை:

பொங்கல் பண்டிகையையொட்டி, அரிசி ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 உடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று அறிவித்த நிலையில், இன்று அதற்கான நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

நேற்று கள்ளக்குறிச்சி புதிய மாவட்டத்தை தொடங்கி வைத்து பேசிய  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் அனைத்து அரிசி ரேசன் அட்டைதாரர்களுக்கும், பொங்கல் பரிசாக ரூ.1000 உடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும்  வழங்கப்படும் என அறிவித்தார்.

அதன்படி கார்டுதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, கரும்பு, முந்திரி, உலர் திராட்சை உள்ளிட்டவை அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்புடன், ரூபாய் 1000 ரொக்கம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில்,  பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக, 2 ஆயிரத்து 363 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து மாநில அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது.