சென்னை:  மாநகராட்சியில்  நிலுவையில் இருந்த ₹200கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை  மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சிக்கு பல கோடி ரூபாய் சொத்து வரி நிலுவையில் உள்ள நிலையில், ரூ.200 கோடி வசூலிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.  சென்னை மாநகராட்சிக்கு கிடைக்கும் வருவாயில் சொத்து  வரி முதன்மையானது. அதைத் தொடர்ந்து தொழில் வரி மூலமும் வருமானம் கிடைக்கிறது. சென்னை மாநகராட்சியின் வருவாயில் சொத்து வரி மற்றும் தொழில் வரி முதன்மையாக உள்ளது. மொத்தம் 13.48 லட்சம் சொத்து உரிமையாளர்களிடம் இருந்து, 2023 – -24ம் நிதியாண்டில், 1,552 கோடி ரூபாயும், முந்தைய பாக்கி 494 கோடி ரூபாயும் வசூலாக வேண்டிய நிலையில், வெறும் 200 கோடி ரூபாய்தான் வசூல் செய்யப்பட்டு உள்ளது.

கடந்த 2023ம் ஆண்டு மார்ச் வரை ரூ.1,408.97 கோடி வசூல் செய்யப்பட்டு இருப்பதாகவும்,  நிலுவையிலுள்ள சொத்துவரியினை வசூலிக்க வருவாய் துறையால் தீவிர பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அறிவிக்கப்பட்டது.  அத்துடன்,   சென்னையில் உள்ள 13.33 லட்சம் சொத்து உரிமையாளர்களிடமிருந்து, அரையாண்டுக்கு தலா 750 கோடி ரூபாய் என 1,500 கோடி ரூபாய் வரை வசூலிக்க சென்னை மாநகராட்சிக்கு இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாக தெரிவித்தது.

ஆனால், அதன்படி முழுமையாக சொத்து வரி வசூல் செய்ய முடியவில்லை. பல வழக்குகள் மற்றும் அரசியல்வாதிகளின் மிரட்டல்கள், ஆளும் கட்சியினரின் அடாவடி காரணமாக பல நூறு கோடி ரூபாய் வரி வசூல் செய்யப்படாத நிலை உள்ளது.  தோராயமாக கூற வேண்டுமானால், நீதிமன்ற வழக்குகள் நிலுவை உள்ள 100 சொத்து உரிமையாளர்கள் மூலம் ரூ.57 கோடியும், சொத்துவரி நிலுவை வைத்துள்ள முதல் 100 சொத்து உரிமையாளர்களின் மூலம் ரூ.35 கோடியும் சொத்துவரி நிலுவை உள்ளது என கடந்த ஆண்டு மாநகராட்சி அறிவித்தது.

இந்த நிலையில், தற்போது, நிலுவையில் இருந்த ₹200கோடி சொத்து வரி வசூல் செய்யப்பட்டு இருப்பதாக சென்னை  மாநகராட்சிஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார். மிக்ஜாம் புயல் நேரத்தில் வரி வசூல் செய்வதில் சற்று கால அவகாசம் கொடுக்கப்பட்டது. வரிக்காக சதுரஅடியை குறைத்து காண்பித்தவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்றுவருவதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சியின் வருவாயில் சொத்து வரி மற்றும் தொழில் வரி முதன்மையாக உள்ளது. மொத்தம் 13.48 லட்சம் சொத்து உரிமையாளர்களிடம் இருந்து, 2023 – -24ம் நிதியாண்டில், 1,552 கோடி ரூபாயும், முந்தைய பாக்கி 494 கோடி ரூபாயும் வசூலாக வேண்டிய நிலையில், வெறும் 200 கோடி ரூபாய்தான் வசூல் செய்யப்பட்டு உள்ளது.

மாநகராட்சி சொத்து வரி விபரம்
சொத்து வரி செலுத்துவோர் 13.48 லட்சம் பேர்
2023–24 சொத்து வரி நிர்ணயம் ரூ.1,552.88 கோடி
ஜன., 2024 வரை மொத்த வசூல் ரூ.1,244.43 கோடிமுந்தைய நிலுவை ரூ.494.26 கோடி
வசூலானது ரூ.6.80 கோடி

2023-24ம் நிதியாண்டு வசூல், நிலுவை விபரம்
மண்டலம் சொத்து உரிமையாளர்கள் (லட்சத்தில்) முந்தைய நிலுவை (ரூ.கோடியில்) 2023–24 நிதியாண்டு நிர்ணயம் (ரூ.கோடியில்) மொத்த வசூல் 31 ஜன., வரை (ரூ.கோடியில்) மொத்த நிலுவை (ரூ.கோடியில்)

திருவொற்றியூர் 0.44 8.72 26.35 21.60 13.47
மணலி 0.32 9.43 20.16 17.37 12.22
மாதவரம் 0.67 7.68 45.74 37.23 16.19
தண்டையார்பேட்டை 0.81 19.05 52.90 39.18 32.77
ராயபுரம் 0.69 80.90 202.33 155.80 127.43
திரு.வி.க.நகர் 0.88 20.99 57.17 44.76 33.40
அம்பத்துார் 1.30 74.05 127.21 103.63 97.63
அண்ணா நகர் 1.13 56.37 145.57 114.93 87.01
தேனாம்பேட்டை 1.15 63.60 307.60 251.26 119.94
கோடம்பாக்கம் 1.47 39.60 142.98 113.81 68.77
வளசரவாக்கம் 0.97 15.94 67.33 57.47 25.80

ஆலந்துார் 0.72 13.35 47.24 40.06 20.53
அடையாறு 1.22 48.67 193.98 157.53 85.12
பெருங்குடி 0.97 14.50 51.86 41.65 24.71
சோழிங்கநல்லுார் 0.74 21.41 64.46 54.95 30.92
மொத்தம் 13.48 494.26 1,552.88 1,251.23 795.91

கடை வாடகை வசூல்
மாநகராட்சியின் 15 மண்டலங்களில் உள்ள மொத்த கடைகள் 5,888
2023–24 வசூலாக வேண்டிய வாடகை ரூ.20 கோடி
ஜன., 2024 வரை வசூல் ரூ.8 கோடி
முந்தைய நிலுவை ரூ.55 கோடி
வசூலானது ரூ.7 கோடி

தொழில் வரி

தொழில் வரி செலுத்துவோர் 1.95 லட்சம் பேர்
2023 – -24 நிர்ணயம் 508 கோடி ரூபாய்
ஜன., 2024 வரை வசூல் ரூ.235 கோடி
முந்தைய நிலுவை ரூ.209 கோடி
வசூலானது ரூ.58 கோடி
* தொழில் உரிமம் வசூல்
மொத்த தொழில் உரிமம் 77,000
உரிமம் புதுப்பிக்காத கடைகள் 7,000
2023–24 வசூலாக வேண்டியது- ரூ.21 கோடி
வசூலானது ரூ.20 கோடி

வரி வசூல், நோட்டீஸ் வழங்க, இடத்தை அளக்க, உரிமம் வழங்க, புதுப்பிக்க, கள ஆய்வு, ‘சீல்’ வைப்பது, நீண்ட கால நிலுவைத் தொகையை பேசி வசூலிப்பது, தேர்தல் மற்றும் பேரிடர் கால அவசர பணிகளை, மண்டல வருவாய் அதிகாரிகள் செய்வர்.இவர்களுக்கு, ஒப்பந்த அடிப்படையில் வாகனம் வழங்கப்பட்டது. இந்த வாகனங்களை திரும்பப் பெற்றுள்ளனர். நிர்ணயித்த வரி வசூல் இலக்கை அடைய முடியாததற்கு, இதுவும் ஒரு காரணம் என, அதிகாரிகள்  தெரிவித்து உள்ளனர்.