சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, பணப்பட்டுவாடா நடப்பதை தடுக்கும் பொருட்டு, வருமான வரித்துறை மற்றும் தேர்தல் அதிகாரிகள் தீவிரமான கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், சென்னை விமான நிலையத்தில்  வருமான வரித்துறை அதிகாரிகள்,  ஹவாலா புரோக்கரைம் கைது செய்துள்ளனர்.

துபாயில் இருந்து சென்னைக்கு ரூ.200 கோடி ஹவாலா பணத்தை பணப்பரிமாற்றம் செய்ய இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஏப்ரல் 7-ஆம் தேதி சென்னை விமான நிலையத்தில் மலேசியாவில் இருந்து சென்னை வந்த வினோத் குமார்  ஜோசப் என்பவரை வருமான வரித்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தியது. இதில், அவர்கள்,  துபாய் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து சட்டவிரோதமான பணத்தை இந்தியாவிற்கு கொண்டு வரும் ஹவாலா ஏஜெண்டாக செயல்பட்டது தெரியவந்தது.

மலேசியாவில் இருந்து வினோத்குமார் ஜோசப் என்கின்ற தமிழர் அந்நாட்டு அரசாங்கத்தால் நாடு கடத்தப்பட்டுள்ளார் . இவர் கடந்த 7ந்தேதி சென்னை விமான நிலையத்திற்கு வந்தபோது, அவரை தமிழக போலீசார் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி கைது செய்து விசாரணை நடத்தினர். மேலும், அவரது செல்போன், வாட்ஸப் சேட், லேப்டாப்பை ஆய்வு செய்ததில், துபாயை சேர்ந்த செல்வம் மற்றும் தமிழகத்தை சேர்ந்த அப்பு என்கிற விநாயகர் வேலன் ஆகியோர் உதவியுடன் முக்கிய அரசியல் கட்சிக்கு ரூ.200 கோடி ஹவாலா பணத்தை பரிமாற்றம் செய்ய திட்டமிட்டது தெரியவந்துள்ளது

துபாயில் இருந்து கோடிக்கணக்கான பணத்தை இந்தியாவுக்கு சட்ட விரோதமாக கொண்டு வர ஒரு மிகப்பெரிய சதி திட்டம் நடைபெற்று வருவதும், அந்த நெட்வொர்க்கில் வினோத்குமார் ஜோசப்பும் இருப்பதும் தெரியவந்தது. அவரிடம் இருந்த மொபைல் போன், ஐபேட் ,லேப்டாப் ஆகியவை வருமானவரித்துறையால் கைப்பற்றப்பட்டது. பின்னர் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களை ஆராய்ந்த போது, அவர் துபாயில் இருந்து சென்னைக்கு சுமார் 200 கோடி பணத்தை ஹவாலா மூலமாக தமிழகத்தை சேர்ந்த முக்கிய அரசியல் கட்சிக்கு கொடுக்க திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.

இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.