சென்னை: கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு  ரூ.2 லட்சம் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இதுகுறித்து திமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள டிவிட்டில்,  ‘கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில், மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக மொத்தம் 8 பேருக்கு தலா ரூ 25,000 வீதம் மொத்தம் ரூ 2,00,000 வழங்கினார்’ என்று கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக,முன்னதாக கலைஞர் அவர்கள் தனது சொந்த பொறுப்பில் அளித்த ஐந்து கோடி ரூபாயில்,தென்னிந்திய புத்தக விற்பனையாளர்-பதிப்பாளர் சங்கத்துக்கு ஒரு கோடி ரூபாய்  வழங்கியது போக மீதமுள்ள நான்கு கோடி ரூபாயிலிருந்து வரும் வட்டித் தொகையில் மாதந்தோறும் ஏழை எளிய நலிந்தோர்க்கு தொடர்ந்து உதவித் தொகை வழங்கப்படுகிறது.அதன்படி,2005 நவம்பர் முதல் இதுவரை வழங்கிய நிதி ரூ. 5 கோடியே 45 லட்சத்து 90 ஆயிரம் ஆகும்.

இந்நிலையில், தற்போது வங்கியின் வட்டி விகிதம் குறைந்துள்ளதால் ஜனவரி மாதத்திற்கு வட்டியாக கிடைத்த தொகையில் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக மொத்தம் 8 பேருக்கு தலா ரூபாய் 25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சத்தை தமிழக முதல்வரும்,திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கியுள்ளார்.

நிதி உதவி பெறுபவர்களின்  விவரம்:

 1. டி.எம்.வெள்ளைச்சாமி,குரசடிமெத்து,பெரும்பள்ளம் ரோடு, கொடைக்கானல்,திண்டுக்கல் மாவட்டம்.

2. திருமதி கே.அஞ்சலம்,ஆதிதிராவிடர் தெரு,கொத்தாம்பாடி,சேலம் மாவட்டம்.

  1. ஆர்.தேவராஜன்,ஆட்டுக்காரர் தோட்டம்,மின்னக்கல், இராசிபுரம்,நாமக்கல் மாவட்டம்.

4. திருமதி கே.மாதம்மான்,கங்கர அள்ளி,சில்லாரஅள்ளி அஞ்சல்,தருமபுரி மாவட்டம்.

5. வி.கிருஷ்ணப்பா,முகலப்பள்ளி கேட்,தும்மனப்பள்ளி அஞ்சல்,ஓசூர் கிருஷ்ணகிரி மாவட்டம்.

6. கே.குமாரசாமி,தென்கரை பேரூர் பொருளாளர்;சென்னனூர் தண்ணீர்பந்தல்,கோவை மாவட்டம்.

7. திருமதி ஆர்.இந்திராணி, காந்திஜி நகர், காளிபாளையம் அஞ்சல், தாராபுரம் தாலுகா, திருப்பூர் மாவட்டம்.

8. ஏ.பி.ரத்தினவேல்,18வது வார்டு அவைத்தலைவர்,தேர்தல் வீதி,அந்தியூர், ஈரோடு மாவட்டம்.

இந்த நிதியை பெறுவோர் வெளி மாவட்டங்களிலிருந்து வந்துபோகிற செலவினத்தை தவிர்ப்பதற்காக தபால் மூலம் வரைவுக் காசோலையாக அனுப்பப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.