சென்னை:
முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய இடங்களில் ரூ.2.16 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சி காலத்தில் 5 ஆண்டுகளில் மட்டும் வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.85 கோடி சொத்து சேர்த்த விவகாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான 69 இடங்களில் ஒரே நேரத்தில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.2.16 கோடி ரொக்க பணம், 1.130 கிலோ தங்க நகைகள், 40 கிலோ வெள்ளி பொருட்கள், பல கோடி மதிப்புள்ள சொத்து பத்திரங்கள், பினாமிகள் பெயரில் வாங்கி குவித்துள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அமைச்சராக இருந்தபோது தங்கமணி முறைகேடாக சேர்த்த பணத்தை கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்திருப்பதாக முதல் தகவல் அறிக்கையில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் தெரிவித்துள்ளனர்