திருப்பூர்:

ரடங்கு அமலுக்கு வந்தபின் முதல்முறையாக, 15கோடி ரூபாய் மதிப்பிலானஆடைகள், திருப்பூரிலிருந்து, அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.

திருப்பூர் நிறுவனங்கள், பின்னலாடைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்க, மாவட்ட நிர்வாகம் மற்றும் சுங்க அதிகாரிகளிடம் சிறப்பு அனுமதியை, ஏ.இ.பி.சி., பெற்று கொடுத்தது.

ஊரடங்கு அமலுக்கு வந்தபின், முதல்முறையாக நேற்று, திருப்பூரை சேர்ந்த ஆறு நிறுவனங்கள், 15 கோடி ரூபாய் மதிப்பிலான ஆடைகளை, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளன.

கிருமிநாசினி தெளிக்கப்பட்ட கன்டெய்னர்களில் ஆடைகள், சென்னை, துாத்துக்குடி துறைமுகங்களுக்கு எடுத்து செல்லப்பட்டன.

ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல் கூறுகையில், ”திருப்பூரிலிருந்து, 15 கோடி ரூபாய் மதிப்பிலான பின்னலாடைகளை, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளோம்.

வர்த்தகர்கள் எதிர்பார்க்கும்பட்சத்தில், உற்பத்தி செய்த ஆடைகளை நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்,” என்றார்.