சென்னை: மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பயிர் பாதிப்புக்கு ரூ.132 கோடி நிவாரணம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்பட பல்வேறு கேள்விகளுக்கு பதில் தெரிவித்து, சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பதிலுரை ஆற்றினார்.

  • போக்சோ வழக்குகளுக்கு தனி நீதிமன்றம்
  • நீட்விலக்கு மசோதாவுக்கு ஆதரவு அளித்த அதிமுகவுக்கு நன்றி
  • அண்ணா பிறந்தநாளுக்கு தண்டனை கைதிகள் விடுதலை
  • மத்தியஅரசு பேரிடர் நிவாரண நிதி வழங்கவில்லை
  • சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது
  • எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பது இந்த அரசின் கொள்கை

தமிழ்நாட்டு சட்டப்பேரவையின் புத்தாண்டு கூட்டத்தொடரின் 3வது நாள் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இன்று சபை தொடங்கியதும் கேள்வி நேரம் நடை பெற்றது. அப்போது உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்களும், முதலமைச்சர் பதில் அளித்தனர். அதைத் தொடர்ந்து சில சட்ட திருத்த மசோதாக்கல் செய்யப்பட்டன.

அதைத்தொடர்ந்து, ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், சட்டப்பேரவையில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தார். “பேரறிஞர் அண்ணாவின் கூற்றுப்படி ஆளுநர் உரை மிகுந்த கவனத்துடன் தயாரிக்கப்பட்டது. ஆளுநரின் பாராட்டு உரையென்பது, மக்களுக்கான பாராட்டு உரை என்பதை தெரிவிக்க கடமைப்படுகிறேன். ஆளுநரின் உரையென்பது, அரசின் கொள்கை மற்றும் செயல்திட்ட அறிக்கை. அரசின் திட்டங்களை பாராட்டியதற்கு, ஆளுநருக்கும் நன்றி.

எதிர்கால தமிழகம் எல்லா வகையிலும் உயர்வடைய நாம் உறுதியேற்க வேண்டும். கொரோனா தொற்று காரணமாக எல்லா உறுப்பினர்களும் பேச வாய்ப்பு வழங்க முடியவில்லை.

தேர்தல் வாக்குறுதிகளை 5 மாதங்களில் நிறைவேற்றியுள்ளோம். இருந்தாலும், மக்களிடையே திமுக அரசு மீது அவ நம்பிக்கை ஏற்பட வில்லை. கொரோனா தடுப்பு பணிகளுக்காக திமுக அரசை பாராட்டிய அதிமுக உறுப்பினர்  வைத்திய லிங்கத்துக்கு நன்றி. நீட் தேர்வு விலக்குக்கு ஆதரவளிக்கும் அதிமுகவுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்கள், அரசுக்கழகங்கள், சட்டப்பூர்வமான வாரியங்கள், மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் அதிகார அமைப்புகளின் பணியிடங்களுக்கான ஆட்சேர்க்கை தொடர்பான கூடுதல் பணிகளை அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டிருந்த 75% திட்டங்களுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அண்ணாவின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு 10, 20 ஆண்டுகள் தண்டனையை கழித்தவர்கள், ஆயுள் தண்டனை கைதிகள் உள்ளிட்டோரை விதிகளின் படி விடுவிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது – அவர்கள் தரும் அறிக்கையின் படி நடவடிக்கை எடுக்கப்படும்.

அதிக காலம் சிறையிலுள்ள சிறைக்கைதிகளை விடுவிக்க, சட்டமன்ற உறுப்பினர் ப.அப்துல் சமத் பேரவையில் கோரிக்கை வைத்திருந்தார். ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது போல, அறிஞர் அண்ணா பிறந்தநாளில் பலர் விடுதலை செய்யப்படுவர் என தெரிவித்துக்கொள்கிறேன்.

அதன்படி 10, 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையிலுள்ளோர், இணைநோய் உள்ள – நோய் பாதிப்பிருக்கும் சிறைவாசிகள், பயன் பெற இயலாத ஆயுள் தண்டனை, வயது முதிர்ந்த சிறைவாசிகள், மனநல சிறைவாசிகள் ஆகியோரை கண்டறிந்து அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக ஓய்வுபெற்ற நீதியரசர் ஆதிநாதன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு அளிக்கும் பரிந்துரை அடிப்படையில், சிறைக்கைதிகள் விடுவிக்கப்படுவர்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் பணி தமிழகத்தில் துரிதப்படுத்தப்படுகிறது. அதன்படி இந்த ஆட்சிக்காலத்தில் மொத்தமாக பயிர் பாதிப்புக்கு ரூ.132 கோடி நிவாரணம் ஒதுக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 1.62 லட்ச ஹெக்டருக்கும் அதிகமான நிலத்தில் ஏற்பட்ட சேதங்களுக்காக இந்த நிவாரணம் வழங்கப்படுகிறது. மாநில பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து இது தரப்படுகிறது. இந்த நிதி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் இரண்டொரு நாளில் வரவு வைக்கப்படும். மத்திய அரசு நிதி தரவில்லை எனும்போதும், இது மாநில நிதியிலிருந்து மக்களுக்காக ஒதுக்கப்படுகிறது.

மத்திய அரசிடமிருந்து பேரிடர் நிவாரண நிதி வர வில்லை என்றாலும் விவசாயிகள் நலன் காக்க மாநில அரசின் நிவாரண நிதியிருந்து விவசாயிகளுக்குள் நிவாரணம் அளிக்கப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கான இழப்பீடு ஒரு சில நாட்களிலேயே விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்/

பெண் குழந்தைகள் பாலியல் குற்றங்களை தடுக்க 24513 முகாம்கள் பள்ளிகளில் நடத்தப்பட்டுள்ளது, போசோ வழங்குகளை விசாரிக்க சிறப்பு நீதி மன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 2363 போக்ஸோ வழங்குகள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளது. 133 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது

இவையன்றி போக்சோ வழக்குகளை விசாரிக்க திண்டுக்கல், தேனி, திருவள்ளூர் ஆகிய இடங்களில் போக்சோ தனி நீதிமன்றங்கள் அமைக்கப்படுகின்றன. குழந்தைகளுக்கு எதிரான குற்றவழக்கு ஒன்றில் ராயப்பேட்டை காவல்நிலையத்தில் 29 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு எதிரான குற்றவழக்கு ஒன்றில் 82 நாட்களில் விசாரணை முடிந்து தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

மதுரவாயல் சென்னை துறைமுகத் திட்டத்தை அதிமுக ஆட்சி யாளர்கள் முடக்கினர்

அதிமுக ஆட்சியில் அண்ணா நூற்றாண்டு நூலகம் முறையாக பராமரிக்ககப்படவில்லை

கலைஞர் கொண்டு வந்தார் என்பதற்காக பெரியார் சமத்துவபுரம் சீரமைக்கப்படாமல் அதிமுக ஆட்சியில் விடப்பட்டது.

ஜெயலலிதா பெயரில் உள்ள திட்டங்களை திமுக அரசு நிறுத்தவில்லை. அம்மா கேன்டீன் மூடப்படாது.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தடுப்பூசி செலுத்துவது மக்கள் இயங்கமாக மாற்றப்பட்டது

ஆதிதிராவிடர் பழங்குடியினர் பள்ளிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு

கூட்டுறவு சங்கங்களில் நகைக் கடன் ரத்து செய்துள்ளது தேர்தல் வாக்குறுதியில் பெரும்பாலானவற்றை 5 மாதங்களில் நிறைவேற்றி இருக்கிறோம்

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி என்ற வாக்குறுதி செயல்படுத்தப்பட்டுள்ளது. இல்லம் தேடி கல்வி திட்டம் முன்மாதிரி அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சொன்னதை மட்டும் செய்யாமல் சொல்லாததையும் இந்த அரசு செய்து வருகிறது.மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் இதுவரை 43,61,518 பேர் பயன் அடைந்துள்ளார்கள்
அரசுப் பள்ளிகள் இந்தியாவிற்கு முன்னோடியாக விளங்க அரசு நடவடிக்கை எடுக்கும்

இன்னுயிர் காப்போம் திட்டத்தின் மூலம் இதுவரை 5274 பேர் பயன் அடைந்துள்ளார்கள். இன்னுயிர் காப்போம் திட்டம் தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது

தேசிய பேரிடர் நிதிக்காக காத்திருக்காமல் மாநில பேரிடர் நிதியில் இருந்து நிவாரண பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. பருவமழை பாதிப்புகளிலிருந்து நிரந்தர தீர்வு காணும் வகையில் திட்டங்கள் தீட்டப்பட்டு வருகிறது. மழை வெள்ளம் பற்றி பேசுவதற்கு அதிமுகவிற்கு எந்த தகுதியும் கிடையாது தார்மீக உரிமையும் கிடையாது
கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் பராமரிப்புத் தொகை ரூ 2000 உயர்த்தி வழங்கப்படும்

அரசு பள்ளிகளை அனைவரும் விரும்பும் பள்ளியாக மாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது

பெண்களுக்கு எதிரான குற்றங்ககை இரும்பு கரம் கொண்டு. அகற்றப்படும்

8 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

ஒரக்கடத்தில் 150 ஏக்கரில் மருத்துவ பூங்கா அமைக்கப்படும்

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பது இந்த அரசின் கொள்கை

கடந்த 7 மாதத்தில் 3 தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டுள்ளது.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தி கீழ் இதுவரை 2,29,216 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

காவல்துறையை ஏவல் துறையாக மாற்றிவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சாட்டுகிறார். தூத்துக்குடியில் பதிமூன்று பேரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றதை தொலைக்காட்சி பார்த்து தெரிந்துகொண்டேன் என்று மெத்தனமாக கூறியவர் தான் எடப்பாடி பழனிச்சாமி

தமிழகத்தில் தற்போது சட்டத்தின் ஆட்சிதான் நடந்து கொண்டிருக்கிறது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அண்ணா மீது ஆணையாகச் சொல்கிறேன் கலைஞர் மீது ஆணையாகச் சொல்கிறேன் சத்தியமாக தகுந்த நடவடிக்கை எடுப்பேன்

ஒரு மாத கால கஞ்சா வேட்டையில் 9498 பேர் கைது செய்யப்படுள்ளனர். தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சிதான் நடைபெற்று வருகிறது

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிர் இறந்தவர்களுக்கு மாநில அரசின் பேரிடர் நிதியிலிருந்து 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது

கொரொனாவை தடுக்கும் ஆயுதம் தடுப்பூசி தான் சென்னையில் கொரோனா தொற்று பரவல் கட்டுபடுத்தும் நடவடிக்கைகளை மேற்பார்வையிட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்ப்படுகின்றனர். சென்னையில் உள்ள 15 மண்டலங்களுக்கும் தலா ஒரு ஐ.ஏ.எஸ் என 15 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அனைவரும் கட்சி எல்லைகளை கடந்து ஆளுநர் உரையைப் மனப்பூர்வமாக வரவேற்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்

எல்லா அறிவிப்புகளையும் அரசாணையாக வெளியிட்டு செயல்படுத்தி வருகிறோம் உங்களின் அரசாக மட்டுமில்லாமல் உயிர் காக்கும் அரசாக இந்த அரசு வழங்கி வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.