புதுடெல்லி:
புதுடடெல்லி ஆம்ஆத்மி எம்.எல்.ஏ. கட்டார் சிங், தனக்கு இவ்வளவு சொத்து எப்படி சேர்ந்தது என்று தெரியவிலை என்று கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
டெல்லி மெஹ்ரவுலி சட்டசபை  தொகுதி எம்.எல்.ஏ.வாக பொறுப்பு வகிப்பவர், கட்டார் சிங். ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர். நில புரோக்கரான இவர் வீடு மற்றும் நிலங்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார்.
கட்டார் சிங் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அவரது வீடு மற்றும் கடைகளில் சோதனை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், சோதனையில் கார்டர் சிங் தன்வார் வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.130 கோடி பணம் பறிமுதல்  செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தெற்கு டெல்லியில் இவருக்கு சொந்தமான 2.6 ஏக்கர் பரப்பளவு கொண்ட பண்ணைவீடு உள்ளளது.  இவரது சொத்து மதிப்பு சுமார் 130 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, வருமான வரித்துறையினர் விசாரணையில்,  கட்டார்சிங் கூறும்போது, இவ்வளவு சொத்து எனக்கு எப்படி வந்தது என தெரியவில்லை என்று கூறியதாக அதிகாரிகள் கூறினர்.
இந்த சொத்து கணக்கு எதையும், தேர்தலின்போது,  தனது வேட்பு மனுவில் இவர் குறிப்பிடவில்லை என்றும் கூறப்படுகிறது..
ஏற்கனவே, கடந்த மாதம் இவரது வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் ரெய்டு நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள், போலி பெயரிலும், பினாமிகள் பெயரிலும் பல கோடி ரூபாய் அளவிலான கணக்கில் வராத சொத்து பத்திரங்களை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.