மதுரை: மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு இதுவரை ரூ.12.35 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் ஆர்டிஐ தகவல் மூலம் வெளியாகி உள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் தோப்பூரில் 224 ஏக்கரில் இடம் ஒதுக்கப்பட்டது. மேலும், ரூ. 1264 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 750 படுக்கை வசதிகள் கொண்ட எய்ம்ஸ் மருத்துவமனை 45 மாதங்களில் கட்டி முடிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. பிரதமர் 2019 ஆம் ஆண்டு ஜனவரி 27 அன்று மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய அடிக்கல் நாட்டினார். ஆனால், பல்வேறு சிக்கல்களால் மருத்துவமனைக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் ஒருவர்மீது ஒருவரை குற்றம் சாட்டி வருகிறது.

இதையடுத்து,  மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்காக ஜப்பானை சேர்ந்த ஜைக்கா நிறுவனம் ஒதுக்கியுள்ளது. இதுவரை மத்திய அரசு ரூ.12.35 கோடியை மட்டுமே விடுவித்துள்ளது. முதல் கட்டமாக 1,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. கட்டுமான பணிகள் தாமதமாகிய நிலையில், இந்த நிதியை அதிகரித்து ரூ.1,977 கோடியாக அறிவித்தது. மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு ஒதுக்கப்பட்ட தொகையில் இதுவரையில் ரூ.12.35 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது மிகவும் குறைந்த தொகையாக உள்ளது என்பது குறிப்பிட்டத்தக்கது. இதே காலக்கட்டங்களில் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் தொடங்கப்பட்டு, பல மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் செயல்பாட்டு வந்துள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் இதுவரை அடிப்படை பணிகள் கூட தொடங்கப்படவில்லை. ஆனால், மருத்துவ மாணவர்களுக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டு, அந்த மாணவர்கள் மற்ற கல்லூரிகளில் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழ்நாட்டின் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில், ரூ.12.35 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் ஆர்டிஐ தகவல் மூலம் வெளியாகி உள்ளது.

அதேவேளையில்,  உத்தரப்பிரதே எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ.832 கோடியில், ரூ.665 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், ஆந்திரப்பிர தேசத்திற்கு ரூ.1,618 கோடியில் ரூ.1,289.62 கோடியும், மகாராஷ்டிராவிற்கு ரூ.1577 கோடியில் ரூ.1,218.92 கோடியும், மேற்குவங்கத்திற்கு ரூ.1,754 கோடியில் ரூ.1,362 கோடியும், உத்தரப்பிரதேசம் கோரக்பூர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ.1,011 கோடியில், ரூ.874.38 கோடியும், பஞ்சாப் மாநிலத்திற்கு ரூ.925 கோடியில், ரூ.788.62கோடியும், ஹிமாச்சல் பிரதேசத்திற்கு ரூ.1,471.04கோடியில் ரூ.1,407.93கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.