சென்னை:
சென்னையில் முதலீடு திட்டம் என்று ஏமாற்றி 1100 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் 4 பேரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.

முதலீட்டுக்கு மாதம் தோறும் குறிப்பிட்ட தொகை தருவதாகவும், இறுதியில் நிலம் தரப்படும் என்றும் நூதன முறையில் ஏராளமானோரிடம் டிஸ்க் அசட்ஸ் லீட் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனம் பணம் திரட்டியுள்ளது.

நிலத்தை தராமல் ஏமாற்றியதாக பலர் புகார் அளித்ததால் அந்த நிறுவனம் மீது பொருளாதார குற்றத்தடுப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். அதனடிப்படையில் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை, முதலீட்டு பணத்தை பல நிறுவனங்கள், அறக்கட்டளைக்கு திசை திருப்பி விட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் உமாசங்கர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.