திருச்சி: நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் திருச்சி வேட்பாளர் வீரசக்தியின் நண்பர் வீட்டில் ரூ.10 கோடி பணத்தை வருமான வரித்துறையினர் கைப்பற்றி உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஊழலை எதிர்த்து, திமுக, அதிமுக கட்சிகளை கடுமையாக சாடி வரும் கமல்ஹாசன், அவரது வாகனத்தை தேர்தல் அதிகாரிகள் சோதனை போட்டதையும், அவரது கட்சியினர் விடுகளில் ரெய்டு நடத்தப்படுவதையும் கடுமையாக கண்டித்து வருகிறார். அரசு திட்டமிட்டு தன்து கட்சியினரை தொல்லைப்படுத்துகிறது என்று குற்றம் சாட்டி வருகிறார்.
தற்போது திருச்சி மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டு வரும் கமல்ஹாசன், இரு கட்சிகளும் இழல் இல்லை என்று சொல்லவில்லை.நம்முடைய பணம் ரூ.30 லட்சம் கோடியை இவர்கள் இருவரும் அடித்துவிட்டார்கள், ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி அவர்களே வேட்டு வைத்து கொள்கிறார்கள் என்று கடுமையாக விமர்சித்தார்.
இதற்கிடையில், மநீம கட்சி வேட்பாளர் வீரசக்தியின் நண்பர்வீட்டில் வருமான வரித்துறையினர் இன்று நடத்திய அதிரடி வேட்டையில் ரூ.10 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மேலும், சந்திரசேகரன் கமல் இணைந்து சமீபத்தில் ராஜ்கமல் பிரான்டியர்ஸ் என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை தொடங்கியிருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே கமல்ஹாசனின் மநீம கட்சியின் பொருளாளருக்கு சொந்தமான நிறுவனத்தில் ரூ.11.5 கோடி கைப்பற்றப்பட்ட நிலையில், தற்போது மேலும் ரூ.10 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தனது கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்கும் கமல்ஹாசன், ஆடம்பரமாக ஹெலிகாப்டரில்தான் தேர்தல் பிரசாரத்துக்கு பறந்துகொண்டிருக்கிறார். அதற்கான செலவு செய்வது யார், அவரது கட்சியின் பின்னணியில் இருப்பது யார் என்பது குறித்து வெளிப்படையாக அறிவிக்க மறுத்து வருவதுடன், ஊழலை ஒழிப்பதாக மக்களிடையே பரப்புரை மேற்கொண்டு வருகிறார்…
‘இந்தியனாக’ தன்னை காட்டிக்கொள்ளும் கமல்ஹாசன் ஊருக்குத்தான் உபதேசம் செய்கிறார் என்பதற்கு இதுபோன்ற ரெய்டுகளில் கிடைக்கும் பணமே சாட்சி.
காமராஜர், எம்.ஜி.ஆரை சொந்தம் கொண்டாடிய கமல்ஹாசன், திமுக அதிமுக மீது சரமாரியாக குற்றச்சாட்டு…