பாஜக ஆட்சிப்பொறுப்பேற்ற கடந்த ஒன்பதரை ஆண்டுகளில்
ரூ.117 லட்சம் கோடி கடன் வாங்கி இந்தியாவை உலகின் மிகப்பெரிய கடன்கார நாடாக மாற்றியுள்ளது.

ஆனால், இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் ரூ. 400 மதிப்புள்ள கொரோனா தடுப்பூசியை இந்திய மக்கள் அனைவருக்கும் மத்திய அரசு இலவசமாக வழங்கியதாக பாஜக ஆதரவாளர்கள் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இலவசம் என்ற பெயரில் பாஜக அரசு மக்களை ஏமாற்றி வருவதாக சமூகவலைத்தள ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

கொரோனா தடுப்பூசி வாங்க மத்திய அரசால் நியமிக்கப்பட்ட HLL life care Ltd என்ற நிறுவனம் சீரம் நிறுவனத்தின் தயாரிப்பான Covishield தடுப்பூசியை Rs.25,585.87 கோடிக்கும் பாரத் பையோடெக் நிறுவனத்தின் தயாரிப்பான Covaxin தடுப்பூசியை Rs.7,536.87 கோடிக்கும் வாங்கியுள்ளது.

இது தவிர PM care நிதியின் மூலமாக Covishield தடுப்பூசி Rs.1176 கோடிக்கும் Covaxin தடுப்பூசியை Rs.216.82 கோடிக்கும் மத்திய சுகாதார அமைச்சகம் வாங்கியுள்ளது. ஆக மொத்தம் ரூ. 34,515.07 கோடிக்கு கொரோனா தடுப்பூசிவாங்கியுள்ளது மத்திய அரசு.

அதில் மக்கள் நன்கொடையாக வழங்கிய PM care நிதி மூலம் Rs.1,392.82 கோடியை செலவழித்துள்ளது.

தவிர Asia Pacific vaccine access facility (APVAX) எனும் திட்டத்தின் கீழ் ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் (Asian Development Bank) இருந்து பெறப்பட்ட கடன் சுமார் ரூ. 15,000 கோடியை (1.5 Billion Dollars) கொரோனா தடுப்பூசிக்காக செலவிட்டுள்ள மத்திய அரசு மீதமுள்ள ரூ. 18,213 கோடியை மட்டுமே தனது நிதியில் இருந்து செலவிட்டுள்ளது.

ஆனால் கொரோனா காலகட்டத்திலும் பல்வேறு வரிவருவாயை ஈட்டிய மத்திய அரசு 2020 – 21 நிதியாண்டில் மட்டும் பெட்ரோலிய பொருட்களின் மீதான வரியாக ரூ. 3,71,908 கோடி வருமானம் ஈட்டியதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பெட்ரோலிய பொருட்களின் மீதான வரி மட்டும் ஒரே ஆண்டில் இத்தனை லட்சம் கோடி என்ற நிலையில் கொரோனா தடுப்பூசிக்காக வெறும் Rs.18,213 கோடி மட்டுமே செலவழித்துள்ளது மத்திய பாஜக அரசின் நிர்வாக திறமையின்மையை காட்டுவதாக உள்ளது எனவும் இதுபோன்ற நிர்வாக திறனற்ற அரசாலேயே இந்தியர்கள் ஒவ்வொருவர் தலையிலும் சுமார் ரூ. 1 லட்சம் கடன் சுமை உள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர்.