முனுசாமி
முனுசாமி

சென்னை:

வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியில், கொள்ளையரால் கத்தியால் குத்தப்பட்டு  உயிரிழந்த ஓசூர் தலைமை காவலர் முனுசாமியின் குடும்பத்திற்கு ரூ 1 கோடி நிதி உதவி வழங்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

முதல்வர் அறிவிப்பு
முதல்வர் அறிவிப்பு

இது குறித்து இன்று சட்டசபையில் பேசிய முதல்வர், “காவலர் முனுசாமியின் குடும்பத்துக்கு அரசு விதியின் படி ரூ.5 லட்சம் வழங்கினோம் ஆனால் அது அவரது குடும்பத்திற்கு உரிய நிவாரணமாக அமையுமா என்ற கருத்தின் அடிப்படையில் ரூ 1 கோடி நிவாரண தொகை அளிக்கவும் அவரது மகள் படிப்புச்செலவை அரசே ஏற்கும் “ என்று  110 வது விதியின் கீழ் முதல்வர் அறிவித்தார்.

காவலர் முனுசாமிக்கு வழங்கப்பட்ட ரூ.5 லட்சம் உதவி தொகை குறித்த காவலர்களின் அதிருப்தி நிலவியது.  காவலர்களே  தங்களுக்குள் வசூல் செய்து முனுசாமி குடும்பத்துக்கு  ரூ 1 கோடி  அளிக்க திட்டமிட்டு வாட்ஸ்அப் போன்ற சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.