திருச்சி: திருச்சி அருகே  அதிமுகவை சேர்ந்த  எட்டரை ஊராட்சிமன்ற  தலைவர் வீட்டில் ரூ.1 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஊராட்சி தலைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

திருச்சியில் ரூ.1 கோடி பறிமுதல் செய்த வழக்கில் எட்டரை ஊராட்சி தலைவர் திவ்யா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எட்டரை ஊராட்சி (Ettarai Gram Panchayat), தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அந்தநல்லூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கும் திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.

இந்த  எட்டரை ஊராட்சியின்  பஞ்சாயத்து தலைவராக அதிமுகவைச் சேர்ந்த  திவ்யா இருந்து வருகிறதார். இவரது  வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க பணம் பதுக்கி வைத்துள்ளதாக தேர்தல் ஆணையத்துக்கு புகார் வந்தது. அதன்படி, அங்குவந்து அதிரடி சோதனை நடத்திய நிலையில், திவ்யா வீட்டில்,  ரூ.1 கோடி பணம் நேற்று பறிமுதல் செய்யப்பட்டது.

கைப்பற்றிய ரூ.1 கோடி தொடர்பாக வருமான வரித்துறை விசாரித்த நிலையில் திவ்யா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.1 கோடி யார் மூலம் வந்தது என விசாரணை செய்து வருவதாக திருச்சி தேர்தல் அலுவலர் பிரதீப்குமார் தெரிவித்திருக்கிறார்.

இதற்கிடையில், அன்பரசன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை தெரிந்து கொண்ட கட்சியின், வழக்கறிஞர்கள், அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் அவரது வீட்டின் முன்பு கூடினர். இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.