சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர். இதில், மணப்பபாறை அதிமுக வேட்பாளடம் பணி செய்து வரும் ஜேசிபி  ஓட்டுநர் வீட்டில் இருந்து ரூ.1 கோடி யை வருமானவரித்துறை பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் களம் தகித்து வருகிறது. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் இலவச பொருட்களை கொடுத்து வாக்குகளை பெற அரசியல் கட்சிகள் ரகசியமாக பணியாற்றி வருகின்றன. இதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், வருமான வரித்துறையினரும் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கட்சி பேதமின்றி ஆளும் கட்சி, எதிர்க்ககட்சி என அனைத்து தரப்பினர் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,  மணப்பாறை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சந்திரசேகருக்கு சொந்தமாணவர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, அவரது நிறுவனத்தில் ஜேசிபி ஓட்டுநராக வேலை செய்யும்  அழகர்சாமி என்பவரது வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.1 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.  இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேட்பாளர் சந்திரசேகரனின் சொத்து விவரம் குறித்து அறிய கீழே உள்ள  லிங்கை ஓப்பன் செய்யுங்கள்..

Affidavit-chandrasekar Manapaarai