பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் இரத்தம் ரணம் ரெளத்திரம். இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் தயாராகி வருகிறது. டிவிவி நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்து வருகிறது.

கொரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்டது. இதனால், ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் வெளியீடு 2022ஆம் ஆண்டிற்கு தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னொரு முக்கியமான வருவாய் சேட்டிலைட், டிஜிட்டல் உரிமை. ஆர்ஆர்ஆர் படத்தின் அனைத்து மொழி 300 கோடிகளுக்கு மேல் (சுமார் 325 கோடிகள்) விலை பேசப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதன் சேட்டிலைட், டிஜிட்டல் உரிமையை Zee5 கைப்பற்றியுள்ளது .

ஆர்ஆர்ஆர் வெளியீட்டுக்கு முன்பே 850 முதல் 875 கோடிகள்வரை நிச்சயம் சம்பாதிக்கும் என்கிறார்கள். இது நடந்தால் படவெளியீட்டுக்கு முன்பே 450 – 475 கோடி லாபம் தயாரிப்பாளர்களின் பாக்கெட்டுக்கு வந்து சேரும்.

பாகுபலிக்கு இசையமைத்த கீரவாணியே இதற்கும் இசை. கீரவாணி . பாலசந்தரின் அழகன் உள்பட பல படங்களுக்கு இசையமைத்த மரகதமணிதான் இவர்.

இந்நிலையில் தற்போது RRR திரைப்படத்தின் பாடல்கள் & இசை குறித்த முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.இயக்குநர் SS ராஜமௌலி இயக்கத்தில் தயாராகி வரும் RRR படத்தின் ஆடியோ உரிமைகள் அனைத்தையும் பிரபல நிறுவனங்களான டி-சீரிஸ் மற்றும் லஹரி மியூசிக் நிறுவனங்கள் பெற்றுள்ளன.

இதில் தென்னிந்தியாவின் ஆடியோ உரிமைகளை லஹரி மியூசிக் நிறுவனமும் வட இந்தியாவின்(ஹிந்தி) ஆடியோ உரிமைகளை டி-சீரிஸ் நிறுவனமும் பெற்றுள்ளது.