செஸ் ஒலிம்பியாட்: 2வது நாள் ஆட்டம் தொடங்கியது… பிரக்ஞானந்தா களமிறங்கினார்…

Must read

சென்னை: 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 2வது சுற்று போட்டிகள் இன்று மாலை தொடங்கின. இன்றைய 2வது சுற்றில் இந்திய அணியில் தமிழ்நாட்டின் இளம்வீரரான  பிரக்ஞானந்தா விளையாடுகிறார்.

செஸ் ஒலிம்பியாட் தொடர் நேற்று தொடங்கிய நிலையில்,  முதல் சுற்றில் ஆடிய இந்திய அணிகள் ஆடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றனர். இந்த நிலையில்,   2வது சுற்று தொடங்கி உள்ளது. இதில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா உள்பட  இந்திய வீரர்கள், வீராங்கனைகள் களமிறங்கி உள்ளனர்.

இன்று களமிறங்கும் அணிகள் விவரம்:

இந்தியா ஆடவர் ஏ அணி vs மால்டோவா

1. ஹரிகிருஷ்ணா பெண்டாலா  –  சிட்கோ இவான்
2. அர்ஜுன் எரிகைசி – மகோவை ஆண்ட்ரை
3. நாராயணன் எஸ்.எல் – ஹமிடெவிசி விளாமிடிர்
4. சசிகிரன் கிருஷ்ணன் – பல்டாக் லுலியன்

இந்தியா ஆடவர் பி அணி vs எஸ்டானியா

  1. குகேஷ் – கிக் கலே
    2. பிரக்ஞானந்தா – சுகாவின் கிரில்
    3. அதிபன் – வாலாடின் அலெக்ஸாண்டர்
    4. ரோனக் சத்வானி – ஷிஷ்கோவ் ஆண்ட்ரை

இந்தியா ஆடவர் சி அணி vs மெக்சிகோ

  1. சூர்யா சேகர் கங்குலி – ஹெர்னாண்டஸ்
    2. சேதுராமன் – லூயிஸ் ஃபெர்னாண்டோ
    3. அபிஜித் குப்தா – டயாஸ் ரோஸஸ் ஜூலியோ செசர்
    4. கார்த்திகேயன் முரளி – காபோ விடால்

இந்தியா மகளிர் ஏ அணி vs அர்ஜெண்டினா

  1. கோனெரு ஹம்பி – ஜுரியல் மரிஸா
    2. வைஷாலி – மரியா ஜோஸ்
    3. டானியா சச்தேவ் – பார்டா ரோடாஸ்
    4. பக்தி குல்கர்னி  – மரியா பெலென்

இந்தியா மகளிர் பி அணி vs லட்வியா

  1. வந்திகா அகர்வால் – ரோகுலே லாரா
    2. பத்மினி ரூட் – பெர்ஸினா
    3. சௌமியா சுவாமிநாதன் – அக்னெஸா ஸ்டெபானியா
    4. மேரி அன் கம்ஸ் – மக்லகோவா

இந்தியா மகளிர் சி அணி vs சிங்கப்பூர்

  1. ஈஷா கர்வடே – கெகேய் அஞ்செலா
    2. நந்திதா பி.வி – என் இம்மானுவேல்
    3. பிரத்யுஷா – லியூ யாங் ஹாஸெல்
    4. விஷ்வா வஸ்னவாலா – ஃபாங் குன்

 

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article