திருச்சி: திருச்சியில், புதிதாக கட்டிய அரசு பள்ளி கட்டிடம் திறக்கப்பட்டு  9 மாதமே ஆன நிலையில், அப்பள்ளி வகுப்பறையின்  மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் விடுமுறை நாளில் நடைபெற்றுள்ளதால்,  அந்த வகுப்பறையில் படிக்கும் குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பெற்றோர்கள், பள்ளி ஆசிரியர்களிடம் சரமாரியாக கேள்வி எழுப்பியதுடன், திமுக அரசை கடுமையாக சாடியுள்ளனர். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள சிங்களாந்தபுரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது.  இரண்டு வகுப்பறை பள்ளியாக செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஒன்றாவது முதல் ஐந்தாம் வகுப்பு  வரை மொத்தம்  34 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு திறக்கப்பட்டு 9 மாதங்களே ஆகி உள்ளது. இந்த நிலையில், வகுப்பறையின் சிமெண்ட் பூச்சு விழுந்துள்ளது.

தற்போது பள்ளிகளில் காலாண்டு தேர்வு நடைபெற்று வரும் நிலையில்,  மாணவ மாணவிகள்  இன்று வழக்கம்போல பள்ளிக்கு வந்திருந்தனர்.  இன்று காலையில் மாணவ மாணவிகளுக்கு  காலை உணவு திட்டத்திற்காக குழந்தைகளை வைத்துக் கொண்டு சாப்பாடு கொடுப்பதற்காக வகுப்பறை கட்டிடத்தை திறந்து பார்த்தபோது,  அந்த அறையில்  மேற்கூரை சிமெண்ட் பூச்சு இடிந்து விழுந்து மாணவிகள் உட்காரும் நாற்காலியில் கொட்டிக் கிடந்தன. . இந்த சிமென்ட் பூச்சு வகுப்பறையில்   இருந்த எல்இடி டிவி மீதும் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது தெரிய வந்துள்ளது.

இதை கண்ட ஆசிரியர் அதிர்ச்சி அடைந்தார். உடனே வகுப்பறைக்குள் யாரும் செல்லாதவாறு தடுத்ததுடன், இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார்.

பள்ளி வகுப்பறையில் குழந்தைகள் இருக்கும் பொழுது இச்சம்பவம் நடந்திருந்தால் குழந்தைகள் அனைவரும் காயமடைந்து இருப்பார்கள். நல்வாய்ப்பாக பள்ளி துவங்கும் முன்பு இந்த அசம்பாவிதம் நடந்ததால் குழந்தைகள் காயம் இன்றி உயிர் தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த பெற்றோர், பள்ளியை முற்றுகையிட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து பள்ளி ஆசிரியர் புகாரின் பேரில், ,  முசிறி கல்வி மாவட்ட அலுவலர் கனகராஜ் விரைந்து வந்து, பள்ளி கட்டித்தை  நேரில் பார்வையிட்டார்.  இதற்குள் தகவல் அறிந்த பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஒருபுறம் அரசு பள்ளிகளுக்கு நவீன கட்டிடங்களை கட்டி தினசரி திறப்பு காண்கிறது. அதை சாதனையாக பறைசாற்றி வருகிறது. ஆனால், தரமில்லாத கட்டிங்களால் பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. திமுக அரசு, கல்வெட்டு திறப்பதிலும், சாதனை என வெற்று விளம்பரங்களை வெளியிடுவதில் காட்டும்  ஆர்வத்தை மாணவ மாணவிகளின் நலனிலும் காட்ட வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

நன்றி : I News Tamil,  Trichy