சென்னை:  கனமழையால்  சைதாப்பேட்டையில் இடிந்து விழுந்தபெட்ரோல் பங்க் மேற்கூரையார் ஒருவர் உயிரிழந்த நிலையில், அந்த பங்குக்கு சீல் வைத்த அதிகாரிகள், இது தொடர்பாக பங்க உரிமையாளர் மற்றும் மேலாளர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்கிடையில் இந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்து ஆறுதல் கூறினார்.

சென்னையில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று பெய்த கனமழையின்போது,  சைதாப்பேட்டையில் உ

ள்ள பெட்ரோல் பங்கின் கூரை திடீரென இடிந்து விழுந்தது. இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் ஒன்று சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையில் உள்ளது. இங்கு மழைக்கு பலர் ஒதுங்கியிருந்த சமயத்தில், அந்த பங்கின்  மேற்கூரை நேற்று இரவு திடீரென பயங்கர சத்தத்துடன் சரிந்து விழுந்தது.

இந்த விபத்து காரணமாக, அங்கு மழைக்காக ஒதுங்கியவர்கள் இடிபாடுகளில் சிக்கினார். தகவல் அறிந்து தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். மேற்கூரையின் அடியில் சிக்கி காயம் அடைந்த 20 பேர் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் கிண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த பெட்ரோல் பங்க் ஊழியர் கந்தசாமி பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்துள்ள 19 பேரில் 7 பேர்  லேசான காயம் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். ஒருவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையிலும், 11 பேர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து காவல்துறை வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகிறது. மேலும்,  சம்பவ இடத்தில் அமைச்சர் மா.சுப்ரமணியன், துணை மேயர் மகேஷ் குமார், சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தூர் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், சைதாப்பேட்டை பெட்ரோல் பங்க் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான இடத்தில் மீட்பு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும், விபத்துக்குள்ளானவர்களை இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சந்தித்து மருத்துவர்களிடம் தொடர் சிகிச்சை அளிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, அந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர் அசோக் குமார், மேலாளர் வினோத் ஆகியோர் மீது சைதாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் விபத்து நடந்த பெட்ரோல் பங்கிற்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.