தொடரிலிருந்து வெளியேறியது ரொனால்டோவின் யுவன்ட்ஸ் அணி!

Must read

மிலன்: ‘சீரி ஏ’ கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற கிறிஸ்டியானோ ரொனால்டோவின் யுவன்ட்ஸ் கிளப் அணி, சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில், காலிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது.

சாம்பியன்ஸ் லீக் தொடரின் 65வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், ‘ரவுண்டு 16’ சுற்றுக்கான 2வது லெக் போட்டியில், யுவன்ட்ஸ் – லியான் அணிகள் மோதின.

இப்போட்டியில், 2-1 என்ற கணக்கில் யுவன்ட்ஸ் அணி வென்றபோதும்(அந்த 2 கோல்களை அடித்தவர் ரொனால்டோ), பிரான்சில் ஏற்கனவே நடந்த ‘லெக்’ போட்டியில், லியான் அணி, யுவன்ட்ஸ் அணியை வென்றிருந்தது. எனவே, தலா 1 வெற்றி என்ற அடிப்படையில் போட்டி டிரா ஆனது.

இந்நிலையில், அந்நிய மண்ணில் யார் கோல் அடித்தார் என்று கணக்கிடப்பட்டு, அதனடிப்படையில் பிரான்சில் ஒரு கோலடித்த லியான் அணி வென்றதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, யுவன்ட்ஸ் அணியின் காலிறுதி வாய்ப்பு பறிபோய், போட்டியிலிருந்து வெளியேறியது அந்த அணி.

More articles

Latest article