2வது ஒருநாள் போட்டி: நியூசிலாந்து அணிக்கு 325ரன்கள் இலக்கு!

Must read

2வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு 325 ரன்களை இந்திய அணி இலக்காக நிர்ணயித்துள்ளது.

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. நேப்பியர் மைதானத்தில் நடைபெற்ற முதல் நாள் போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 8விக்கெட் வித்யாசத்தில் வெற்றிப்பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

dhoni

இந்நிலையில் இரு அணிகளும் மோதும் 2வது ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஷிகர் தவான் மற்றும் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடினர். அரை சதம் கடந்த இருவரும், நியூசிலாந்து பந்துவீச்சை சிதறடித்து, ரன் குவித்தனர். அணியின் ஸ்கோர் 172 என இருந்த நிலையில் ஷிகர் தவான் 66 ரன்களும், ரோகித் சர்மா 87 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அதன்பின்னர் களமிறங்கிய கேப்டன் விராட் கோலி 43 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். எனினும், அம்பதி ராயுடு மற்றும் டோனி இருவரும் சேர்ந்து அணியின் ஸ்கோரை மேலும் உயர்த்தினர். ராயுடு 47 ரன்களில் ஆட்டமிழந்ததார். டோனி அரை சதத்தை நெருங்கிய நிலையில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 4விக்கெட் இழப்பிற்கு 324ரன்களை குவித்தது. டோனி 48 ரன்களுடன், கேதர் ஜாதவ் 22 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதையடுத்து 325 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இல்க்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கி விளையாடி வருகிறது.

More articles

Latest article