லண்டன்: நடப்பு உலகக்கோப்பைத் தொடரில் 4 சதங்கள் அடித்ததன் மூலம் முன்னாள் இலங்கை வீரர் சங்ககாராவின் சாதனையை சமன் செய்துள்ளார் இந்திய வீரர் ரோகித் ஷர்மா.

இந்த உலகக்கோப்பைத் தொடரில் தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் வங்கதேசம் ஆகிய 4 அணிகளுக்கு எதிராக நடைபெற்ற போட்டிகளில் சதமடித்தார் ஹிட்மேன் என்று அழைக்கப்படும் ரோகித் ஷர்மா.

கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் இலங்கை வீரர் சங்ககாரா 4 சதங்களை அடித்திருந்தார். தற்போது அதே சாதனையை சமன் செய்துள்ளார் ரோகித் ஷர்மா. இந்தியாவிற்கு இன்னும் குறைந்தபட்சம் 2 போட்டிகள் ஆடும் வாய்ப்புகள் இருப்பதால், இந்த சாதனையை ரோகித் ஷர்மா முறியடிக்கவும் வாய்ப்புள்ளது.

மேலும், ஒரே உலகக்கோப்பை தொடரில் 500 ரன்களைக் கடந்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தியுள்ளார் ரோகித் ஷர்மா. இதற்கு முன்னர் இந்த சாதனையை சச்சின் டெண்டுல்கர் வைத்திருந்தார். கடந்த 1996 மற்றும் 2011 உலகக்கோப்பை தொடர்களில் சச்சின் 500 க்கும் மேற்பட்ட ரன்களை அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]