பாரிஸ்

ஃபிரெஞ்சு ஒப்பன் டென்னிஸ் போட்டியில் இருந்து சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் ஃபெடரர் விலகுகிறார்.

தற்போது பாரிஸில் ஃபிரஞ்சு ஓப்பன் டென்னிஸ் போட்டிகல் நடைபெற்று வருகிறது.   இதில் நேற்று சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் ஃபெடரர் மற்றும் ஜெர்மனியின் டொமினிக் கோஃபர் ஆகியோர் போட்டியிட்டனர்.  இதில் டொமினிக்கை வீழ்த்திய ரோஜர் ஃபெடரர் நான்காம் சுற்றுக்கு தகுதி பெற்ரார்.

இந்நிலையில் இன்று ரோஜர் ஃபெடரர் வெளியிட்ட அறிவிப்பில் அவர் ஃபிரஞ்சு ஓப்பன் டென்னிஸ் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.   இது குறித்து அவர், “எனது அணியுடன் நான் ஆலோசித்த பிறகு இந்த போட்டியில் இருந்து விலக தீர்மானித்துள்ளேன்.

எனக்கு இரண்டு முழங்காலிலும் அறுவை சிகிசிக்கை நடந்து ஒரு வருடமாக சிகிச்சையில் உள்ளேன்.   எனது உடல் நலத்தை கவனிப்பது எனக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும்.   என்னால் திடீரென உடல் நலத்தை கவனிக்கும் சாலையில் இருந்து வேறு பாதைக்கு செல்ல முடியாது.  எனவே இந்த முடிவை நான் எடுத்துள்ளேன்” என அறிவித்துள்ளார்.