ண்டன்

ர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒல்லி ராபின்சனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இடைநீக்கம் செய்துள்ளது.

தற்போது இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து இடையே இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.    போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 378 ரன்கள் குவித்தன.  இங்கிலாந்து அணியின் அறிமுக வீரரான ஒல்லி ராபின்சன் 4 விக்கட்டுகளை வீழ்த்தி பாராட்டுக்களைப் பெற்றார்.

ஒல்லி ராபின்சனுக்கு இணைய தளங்களில் பலரும் புகழாரம் செலுத்தி வந்தனர்.  அந்த புகழ்மாலை வெகு விரைவில் அவர் 8 வருடங்களுக்கு முன்பு போட்ட டிவிட்டர் பதிவால் வாடி உதிர்ந்தது.   சுமார் 8 வருடங்களுக்கு முன்பு அவர் தனது டிவீட்டுகளில் இனவெறியை தூண்டும் விதமாக பாலியல் ரீதியான சில வார்த்தைகளைப் பதிவு செய்தது பலரையும் கோபத்தில் ஆழ்த்தியது.

அவரை உடனடியாக அணியை விட்டு நீக்க வேண்டும் எனக் குரல்கள் எழுந்தன.  இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நடத்திய ஆய்வில் இந்த டிவீட்டுகள் ராபின்சன் பதிந்தது என உறுதி ஆகி உள்ளது.  இதற்கு ராபின்சன் மன்னிப்பு கோரி உள்ளார்.  ஆனால் அவரது மன்னிப்பை நிராகரித்து வரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து 7 மாதங்களுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.