சீனா, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நாய் வடிவிலான ரோபோக்கள் அதிகளவில் புழக்கத்தில் உள்ளன.

இந்த வடிவிலான ரோபோக்கள் பார்ப்பதற்கு நாய் போன்ற வடிவில் உள்ளதால் இதனைப் பார்த்து புதியவர்கள் சற்று மிரட்சி அடைகின்றனர் என்பதால் பல்வேறு இடங்களில் இதன் பயன்பாடு அதிகரித்துள்ளது.

உயிரியல் பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களில் அத்துமீறுவோரை கண்காணிக்க இந்த ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

அதேவேளையில், இந்த ரோபோ நாய்களை பார்க்கும் நிஜ நாய்களும் மிரளுவதை அடுத்து தங்களது செல்லப்பிராணிகளை இந்த எந்திரங்களிடம் இருந்து காப்பாற்ற புதிய கொள்கைகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது.