நடிகர் ராதாகிருஷ்ணன் எனும் ஆர்.கே. வீட்டில் 200 சவரன் மற்றும் 2 லட்ச ரூபாய் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளின் படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

எல்லாம் அவன் செயல், அவன் இவன், அழகர் மலை, ஜில்லா உள்ளிட்ட ஏராளமான படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர் ஆர்.கே. சென்னை ராமாபுரத்தை அடுத்த நந்தம்பாக்கம் டிபன்ஸ் ஆபீஸர்ஸ் காலனி 12வது குறுக்கு தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
நேற்று பகலில் நடிகர் ஆர்.கே. வெளியில் சென்ற நேரத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத குடியிருப்பு பகுதியில் உள்ள இவரது வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள் அங்கு தனியாக இருந்த இவரது மனைவியை தாக்கி கட்டிப்போட்டு விட்டு வீட்டில் இருந்த 200 சவரன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

மாலை வீடு திரும்பிய ஆர்.கே. தனது மனைவி தாக்கப்பட்டதையும் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டதையும் அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் சிசிடிவி காட்சிகள் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டது.

காவல்துறையினருக்கு கிடைத்த ஆதாரங்களைக் கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில் ஆர்.கே. வீட்டில் இதற்கு பணிபுரிந்துவரும் ரமேஷ் என்பவர் கொள்ளையில் ஈடுபட்டிருப்பதாக சந்தேகம் எழுந்தது.
இந்த நிலையில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் படங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.
[youtube-feed feed=1]