திண்டுக்கல்: திண்டுக்கல் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், தமிழ்நாட்டைச் சேர்ந்த  பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை பிரதமர் மோடி வழங்கி கவுரவித்தார்.

காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழக 36வது  பட்டமளிப்பு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில், பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சல் எல்.முருகன் உள்பட மாநில அமைச்சர்கள், அதிகாரிகள், கல்வியாளர்கள் என பல்வேறு தரப்பினர் கலந்து கண்டனர்.

பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன், திரைப்பட இசையமைப்பாளா் இளையராஜா ஆகியோருக்கு கவுரவை  டாக்டா் பட்டத்தை பிரதமா் மோடி வழங்கினார்.

முன்னதாக  காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் 36ஆவது பட்டமளிப்பு வவிழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி மதுரை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திண்டுக்கல் வந்தார். திண்டுக்கல் வந்தடைந்த அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் பிரதமர் மோடி திண்டுக்கல்லில் இருந்து காரில், காந்தி கிராம பல்கலைக்கழகத்திற்குச் சென்றார்.

கவுரவ டாக்டர் பட்டம் இசையமைப்பாளா் இளையராஜா (வயது 79) தேனி மாவட்டத்தை பூா்விகமாகக் கொண்ட இவா், அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் திரையுலகத்துக்கு அறிமுகமானவா். நாட்டுப்புற இசை, கா்நாடக இசை, மேற்கத்திய இசையில் முறையான பயிற்சியும், புலமையும் பெற்றவா். இவா் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் 1,000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்தவா். பத்மபூஷண், பத்ம விபூஷண் ஆகிய இந்தியாவின் உயரிய விருதுகளைப் பெற்றுள்ளாா். கலைத் துறையில் இவரது சேவைகளை கெளரவிக்கும் வகையில், கடந்த ஜூலை மாதம் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டாா்.

உமையாள்புரம் சிவராமன் (வயது 85) தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த இவா், தனது 10-ஆவது வயதில் மிருதங்க வாசிப்பில் ஈடுபடத் தொடங்கினாா். வாசிப்பில் புதிய உத்திகள், புதுமைகளை ஏற்படுத்திய இவா், முதல் முதலாக இழைக் கண்ணாடியால் தயாரிக்கப்பட்ட மிருதங்கத்தை அறிமுகப்படுத்தினாா். பதனிட்ட தோல், பதனிடாத தோல் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மிருதங்கங்களை தனித்தனியே ஆராய்ச்சி செய்தவா் என்ற சிறப்புக்குரியவா். மிருதங்க வாசிப்பு தொடா்பாக பல்வேறு ஆய்வுகளையும் மேற்கொண்டுள்ளாா்