ஆட்டிசம்(மன இறுக்கம்), புற்றுநோய் மற்றும் எச்ஐவி நோய்களை குணப்படுத்த விஞ்ஞானிகள்  முக்கிய துருப்பினை  கண்டறிந்துள்ளனர்.
மன இறுக்கம்
உலகின் மிக விசித்திரமான நோய்களுக்கு சிகிச்சையளிப்பது என்பது நாம் நினைப்பதை விட மிக நெருக்கமாகவும் சுலபமாகவும் இருக்கலாம்.
‘செல்’லில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, ஆராய்ச்சியாளர்கள் முதல் முறையாக உயிரணுக்களிலிருந்து ஆர்.என்.ஏ வை தனிமைப்படுத்தும் முறையை மரபணு தொகுப்பு கருவி CRISPR-Cas9 மூலம் கண்டுபிடித்துள்ளனர்.
மார்ச் மாதம் ‘நேச்சர்’ ல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின் படி, அவர்கள் இதற்கு முன்னரே இந்த கருவியைப் பயன்படுத்தி மனித நோய் எதிர்ப்பு செல்களிலிருந்து எச்.ஐ.வி யை நீக்கி எச்.ஐ.வி  பெருக்கமடைவதை மொத்தமாக நிறுத்தியிருக்கிறார்கள்.
autism1
UCSD ல் மூலக்கூறு மருத்துவ இணைப் பேராசிரியர் மற்றும் மூத்த ஆய்வாளர் ஜெனியோ டிஸ்கவரிக்கு கூறுகையில் “இது மரபணுக்களையும் நோய்களையும் கையாள ஒரு புதிய வழியை உருவாக்குகிறது”. மேலும் அவர், “பல நோய்களில் நீங்கள் மரபணுவை திருத்த முடியாது, அதை துண்டுகளாக தான் உடைக்க முடியும்.ஆனால் இங்கே நாம் டிரான்ஸ்க்ரிப்ஷன் இஞ்சினீயரிங்க் அல்லது எடிட்டிங் செய்கிறோம்.இது மிகவும் அற்புதமான விஷயம்” என்றும் கூறினார்.
குறைபாடுள்ள ஆர்.என்.ஏ வுக்கும் சிகிச்சையளிக்க முடியாத நோய்களுக்கும் சம்பந்தமுள்ள  சிகிச்சைகளுக்கு மரபணு-எடிட்டிங் நுட்பம் வழிவகுக்கலாம். இதில் சில புற்றுநோய்கள், உடையக்கூடிய X நோய்க்குறியீடு மற்றும் மன இறுக்கம் போன்ற நோய்களும் அடங்கும்.
autism3
CRISPR-Cas9 ஐ நமது உடல் அம்சங்களை மட்டுமல்லாமல் நம்  ஆளுமையையும் தீர்மானிக்கும் மரபணுக்களை திருத்தவும் திறம்பட பயன்படுத்த முடியும் ஆனால் இந்த தொழில்நுட்பத்தை எவ்வாறு பொறுப்பாக உபயோகிக்கப் போகிறோம் என்பது தான் கேள்வி.