டில்லி

மிழக முதல்வர் மு க ஸ்டாலின் பாஜகவுக்குத் தோல்வி பயம் வந்துள்ள்தாக விமர்சித்துள்ளார்.

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் உரையை திருச்சி சிவா எம்.பி. வாசித்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது உரையில்

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு எனது கடுமையான கண்டனத்தையும் தி.மு.க.வின் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் தனது ஏவல் படைகளான சி.பி.ஐ., வருமான வரித்துறை, அமலாக்கத் துறையை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை பா.ஜ.க. அரசு மிரட்டுகிறது. 

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜார்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் ஆகியோரைக் கைது செய்திருப்பது பாஜகவின் தோல்வி பயத்தின் வெளிப்பாடு ஆகும். இச்சூழலில் ஆம் ஆத்மி கட்சிக்கு, தி.மு.க. உறுதியாகத் துணை நிற்கிறது. கெஜ்ரிவால் கைது மூலம் இந்தியா கூட்டணியை உடைக்க நினைத்த மோடியின் எண்ணம் மக்கள் தோல்வியடைந்துவிட்டது. 

மக்கள் சர்வாதிகாரத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். மக்கள் பாசிச பா.ஜ.க.வை வீழ்த்த மக்கள் தயாராகிவிட்டதை, தேர்தல் பிரசாரத்தின்போது காண முடிகிறது. அரைக்க அரைக்கச் சந்தனம் மணப்பதைப் போல, பா.ஜ.க.வின் தாக்குதல் அதிகமாக அதிகமாகக் கூட்டணியும், கூட்டணித் தலைவர்களும் வலிமை அடைகிறார்கள். அனைத்து மாநிலங்களிலும் இதைப் பார்க்கிறோம்.

எங்களை சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றைப் பயன்படுத்தி பாஜக மிரட்டி இதில் மிரண்டு பா.ஜ.க.வில் ஐக்கியம் ஆகிறவர்கள் மீது நடவடிக்கைகள் இல்லை; அனால் பா.ஜ.க.வின் ஆணவத்துக்கு அடங்காதவர்களை கைது செய்கின்றனர்; நாட்டில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நிலவுவதைப் போல இருக்கிறது. 

யாரும் அடக்குமுறை மூலமாக வென்றதாக வரலாறு இல்லை. மக்கள் ஆணவக் காரர்களின் ஆட்டத்தை அனுமதித்தது இல்லை.  மோடியை “இந்தியா” கூட்டணியின் ஒற்றுமையால் மட்டுமே வீழ்த்த முடியும் என்பதை மறந்து விட வேண்டாம். எனவே இந்தியா கூட்டணி கட்சிகள் உடனடியாக தங்களது தேர்தல் பிரசாரத்தை தொடங்கி தொகுதிப் பங்கீடுகளை விரைந்து முடிக்க வேண்டும். 

ஏப்ரல் 19-ம் தேதி அன்று தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெறுவதால் நான் தினசரி பல நூறு கிலோ மீட்டர் பயணம் செய்து பல்லாயிரக்கணக்கான மக்களைச் சந்தித்து வருகிறேன். தமிழக மக்கள் பாசிச பாஜகவை வீழ்த்த தயாராகி விட்டார்கள். தீவிர பரப்புரையால் என்னால் டில்லி வர இயலவில்லை.என்பதை பொருத்தருளக் கேட்டுக் கொள்கிறேன்.”  

என்று கூறியுள்ளார்.