அப்போலோ புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ‘கைலாசகிரி’ படத்தில் ஆர்.கே.சுரேஷ் முதன் முறையாக இரு வேடங்களில் நடித்துள்ளார் .

இதில் மதுபாலா, சாகர், முரளி கிருஷ்ணா, கண்டா சீனிவாசராவ், பூமாரெட்டி, மேகனா ஸ்ரீ லட்சுமி, பேபி ஹர்ஷிதா மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் வசனம் பாடல்களை சாய்மோகன் குமார் எழுதியுள்ளார்.

கன்ஷியாம் இசையமைத்துள்ளார். முகமது ரபி ஒளிப்பதிவையும், ஜெகதீஷ் பாபு படத்தொகுப்பையும் கவனித்துள்ளனர்.

இந்நிலையில் இந்தப் படம் குறித்து இதன் இயக்குனர் தோட்ட கிருஷ்ணா கூறுகையில், “இந்த படத்தில் அதீத சக்தி கொண்டதுமான மரகதலிங்கத்தை திருடி விற்க ஒரு திருட்டுக் கும்பல் ஈடுபடுகின்றது. அதை தடுத்து லிங்கத்தை காப்பாற்ற ஆர்.கே.சுரேஷ் முயல்கிறார்” என்று கூறினார்.