ஆர். கே. நகர் இடைத்தேர்தல்- திமுக உற்சாகம்!

Must read

சென்னை-

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்ப விநியோகம் இன்று காலை தொடங்கியது.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்ப விநியோகம் இன்று தொடங்கியது. படிவம் ரூ.1000 எனவும் விண்ணப்ப கட்டணம் ரூ.25,000 எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஏராளமான திமுகவினர் விண்ணப்பங்களை வாங்கிச் சென்றனர்.

போட்டியிட விரும்புவோர் இன்று முதல், மார்ச் 12-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 13 ஆம் தேதி விருப்பமனு அளித்தவர்களுக்கான நேர்காணல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அ.தி.மு.க. 3 ஆக  பிரிந்து இருப்பதால் தி.மு.க. உற்சாகமாக களமிறங்கும் என நம்ப ப்படுகிறது. கடந்த தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து தி.மு.க. வேட்பாளராக சிம்லாமுத்துச் சோழன் நிறுத்தப்பட்டார். இந்த முறையும் அவரையே போட்டியிட வைப்பதா? அல்லது வேறு வேட்பாளரை தேர்வு செய்யலாமா என்று  தி.மு.க. மேலிடம் ஆலோசித்து வருகிறது.

 

More articles

Latest article